தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கடையாணி/வர்த்தக வாகன சந்தையில் ஜே.எஸ்.டபுள்யூ., நுழைவு

வர்த்தக வாகன சந்தையில் ஜே.எஸ்.டபுள்யூ., நுழைவு

வர்த்தக வாகன சந்தையில் ஜே.எஸ்.டபுள்யூ., நுழைவு


UPDATED : அக் 07, 2026 08:30 AM

ADDED : அக் 06, 2026 08:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:30 AM ADDED : அக் 06, 2026 08:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஜே .எஸ்.டபுள்யூ.,' குழுமம், 'ஆம்ப் ஸ் டாஸ்' என்ற புதிய பிராண்டை அறிமுகப்படுத்தி, மின்சார வர்த்தக வாகன சந்தையில் நுழைந்துள்ளது. இந்த பிராண்டின் கீழ், 7 முதல் 18 மீட்டர் நீளம் உள்ள மின்சார பஸ்களையும், 55 டன் எடை வரை உள்ள மின்சார லாரிகளை தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

மஹாராஷ்ட்ராவின் சத்ரபதி சாம்பாஜி நகர் பகுதியில், 90 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலையில், இந்த மின்சார வாகனங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இதன் ஆண்டு உற்பத்தி திறன், 15 ஆயிரம் பஸ் மற்றும் லாரிகளை உற்பத்தி செய்ய முடியும்.

முதற்கட்டமாக, 55 டன் டிராக்டர் டிரைலர் லாரி சந்தைக்குள் நுழைந்துள்ளது. இந்த லாரியில், 282 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி கிடைக்கிறது. முழு சார்ஜில், 150 கி.மீ., வரை பயணிக்கலாம் என கூறப்படுகிறது. எதிர்காலத்தில் டிப்பர், டம்பர் லாரிகளை உற்பத்தி செய்ய இந்நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது.

பஸ் பிரிவில், 12 மீட்டர் பள்ளி, ஊழியர்கள் போக்குவரத்து பஸ்களை உற்பத்தி செய்கிறது. 45 மற்றும் 52 சீட் மாடல்களில் வரும் இந்த பஸ்சில், 302 கி.வாட்.ஹார்., லித்தியம் அயான் பேட்டரி வந்துள்ளது. முழு சார்ஜில் 200 கி.மீ., வரை பயணம் செய்யலாம் என கூறப்படுகிறது. டாப் ஸ்பீடு 80 கி.மீ., ஆகும்.

வர்த்தக வாகனங்களை தாண்டி, சார்ஜிங் கட்டமைப்பு, வாகன செயல்பாட்டு தீர்வுகள், நிதி வசதி, விற்பனைக்கு பின் சேவை உள்ளிட்ட பல்வேறு கட்டமைப்புகளை இந்நிறுவனம் உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us