ADDED : நவ 18, 2026 01:19 AM

‘ஹீரோ’ நிறுவனம், அதன் ‘எக்ஸ்ட்ரீட் 125ஆர்’ பைக்கின் ‘ஸ்டெல்த்’ எடிஷன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. உயர் ரக மாடலான இந்த பைக்கின் விலை, ‘டூயல் சேனல் ஏ.பி.எஸ்.,’ மாடலை விட 6,000 ரூபாய் அதிகம்.
இதில், ‘எக்ஸ்ட்ரீம் 160ஆர்’ பைக்கில் வரும் அதே 4.2 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, டர்ன் பை டர்ன் நேவிகேஷன், ஸ்மார்ட்போன் இணைப்பு, டயர் அழுத்தம் கண்காணிப்பு வசதி ஆகிய அம்சங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. பைக்கின் வெளிப்புற கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு, கருப்பு, வெண்கலம், சிவப்பு கலப்பு நிறத்தில் கிடைக்கிறது.
மற்றபடி, 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு இன்ஜின், 5 – ஸ்பீடு கியர்பாக்ஸ், மூன்று ரைட் மோடுகள், க்ரூஸ் கன்ட்ரோல், டூயல் சேனல் ஏ.பி.எஸ்., 10 லிட்டர் டேங்க், 17 அங்குல அலாய் சக்கரங்கள், ட்யூப்லெஸ் டயர், டெலிகோபிக், மோனோ ஷாக் சஸ்பென்ஷன்கள் ஆகியவை நீடிக்கின்றன.
