ADDED : டிச 17, 2025 08:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பி .எம்.டபுள்யூ., நிறுவனத்தின் 'சாப்ட்ருப்' கொண்ட 'மினி கூப்பர் எஸ் கன்வெர்ட்டபிள்' கார், 4ம் தலைமுறையில் அறிமுகமாகியுள்ளது. இது நாட்டின் குறைந்த விலை கன்வெர்ட்டபிள் கார் ஆகும்.
நீளம் 3.9 மீட்டர் உள்ள இந்த காரில், ஏற்கனவே உள்ள 2 லிட்டர் 4 சிலிண்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படுகிறது. சாப்ட் ரூப் உள்ளதால், காரின் எடை 80 கிலோ குறைந்து, 1,380 கிலோவாக உள்ளது.
இந்த காரில், நான்கு காற்று பைகள், வட்ட வடிவில் 9.6 அங்குல ஒ.எல்.இ.டி., டிஸ்ப்ளே, டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், ஹெட்சப் டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ஸ்மார்ட்போன் இணைப்புகள், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கண்ட்ரோல், 215 லிட்டர் பூட் பேஸ் உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

