ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரை காப்பாற்றுமா?
ஆக்டிவா மின்சார ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா பெயரை காப்பாற்றுமா?
ADDED : டிச 04, 2024 08:57 AM

'ஹோண்டா ஸ்கூட்டர்ஸ்' நிறுவனம், ஆக்டிவா-இ என்ற அதன் முதல் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த ஸ்கூட்டரில், இரு 1.5 கி.வாட்.ஹார்., பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே சார்ஜில், 102 கி.மீ., தூரம் வரை பயணிக்கலாம். ஆனால், இதை உரிமையாளர்கள் சார்ஜ் செய்ய முடியாது, பேட்டரி பரிமாற்றம் முறையில் மட்டுமே பயன்படுத்த முடியும். ஹோண்டாவின் பிரத்யேக பேட்டரி பரிமாற்றம் நிலையங்களில் இதை செய்து கொள்ளலாம்.
இரு பேட்டரிகள் இருப்பதால், பூட் ஸ்பேஸ் மிக குறைவாக உள்ளது. முதற்கட்டமாக, பெங்களூரு, மும்பை மற்றும் புதுடில்லியில் பேட்டரி பரிமாற்றம் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
அம்சங்களை பொறுத்தவரையில் 171 எம்.எம்., கிரவுண்ட் கிளியரன்ஸ், 160 எம்.எம்., முன்புற டிஸ்க் மற்றும் 130 எம்.எம்., பின்புற டிரம் பிரேக், 12 அங்குல அலாய் சக்கரங்கள், எல்.இ.டி., லைட்டுகள், 7 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, மூன்று ரைட் மோடுகள், நேவிகேஷன் அமைப்பு ஸ்மார்ட் போன் இணைப்பு வசதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்கூட்டரின் முன்பதிவு, ஜனவரி 1 முதல் ஆரம்பமாக உள்ள நிலையில், அதன் வினியோகம், பிப்ரவரி கடைசி முதல் துவங்குகிறது. இதன் விலை ஜனவரி மாதம் அறிவிக்கப்படும்.