/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
விரிசல் பாதிப்பில் இருந்து தடுக்கலாம்; மண் தன்மையை அறிந்தால் கவலையில்லை
/
விரிசல் பாதிப்பில் இருந்து தடுக்கலாம்; மண் தன்மையை அறிந்தால் கவலையில்லை
விரிசல் பாதிப்பில் இருந்து தடுக்கலாம்; மண் தன்மையை அறிந்தால் கவலையில்லை
விரிசல் பாதிப்பில் இருந்து தடுக்கலாம்; மண் தன்மையை அறிந்தால் கவலையில்லை
ADDED : டிச 06, 2024 11:30 PM

ஒவ்வொரு மனிதனுக்கும் தங்கள் வாழ்நாளில், அவர்களுக்காக அழகிய வீட்டை சொந்தமாக கட்டும் கனவுகள் இருக்கும். அவர்கள் தங்கள் இல்லத்தை கட்டுவதற்கு கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்ய தயாராக இருக்கிறார்கள்.
ஆனால், அந்த கட்டடத்திற்கு அதைவிட மிகவும் உறுதியான அடித்தளம் தேவை என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். எந்த ஒரு கட்டட அடித்தளமும் பூமியிலுள்ள மண் மீது தான் போடப்பட வேண்டும். மண்ணானது கட்டடம் மூலமாக வரக்கூடிய சுமையை ஏற்றம் பெற்று, அடித்தளம் கீழுள்ள மண்ணிற்கு கடத்துகிறது.
அடித்தளத்தின் வடிவமைப்பு எந்த மண்ணின் மேல் கட்டப்படுகிறதோ அதனை பொறுத்து அமைகிறது. மண் பல வருடங்களாக இயற்கை சார்ந்த மாற்றங்களால் உருவாக்கப்படுகிறது. இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்கள்கூட மண்ணை கையில் எடுத்து பார்த்தவுடன், அதன் பண்புகளை பற்றி அறிந்துகொள்ள இயலாது.
கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரி மண் தொழில்நுட்ப துறை முன்னாள் பேராசிரியர் அருமைராஜ் கூறியதாவது:
மண்ணின் தன்மையை அறிந்துகொள்ள சோதனை மூலம் பகுப்பாய்வு செய்து, அதன் பின்னரே சிறந்த அடித்தள வடிவமைப்பு செய்ய முடியும். சிறந்த அடித்தளத்திற்கு உகந்த தாங்கும் திறன் கொண்ட மண் எந்த ஆழத்தில் உள்ளது என்பதையும், களத்தில் ஆய்வு செய்த பின்னரே அறியமுடியும்.
எந்தவொரு கள ஆய்விற்கும் காலமும், பணப்பொருளும் மற்றும் நல்ல தொழில் நெறிகளின் தீர்மானங்களும் தேவைப்படுகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் மற்றும் கட்டடத்தின் எதிர்காலத்தில் விரிசல்களோ, சரிவுகளோ ஏற்படுவதை தவிர்க்க முடியும். அடித்தளத்திற்கு கீழ் வரும் மண்ணை தாங்கும் திறனை ஆய்வு செய்வதற்கு பல உபகரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றான 'ஸ்டேண்டெர்டு பெனட்ரேசன் டெஸ்ட்'(எஸ்.பி.டி.,) உபகரணத்தை கொண்டு களஆய்வு செய்யலாம்.
இந்த முறையில் துளைபோடும் கருவியை கொண்டு மண்ணில் துளைபோட்டு, ஒவ்வொரு மீட்டர் இடைவெளியிலும் எஸ்.பி.டி., செய்து அதன் வெளியீடாக பெறக்கூடிய N குறியீடு மூலமாக மண்ணின் தாங்கும் திறனை கண்டறியப்பட வேண்டும்.
ஒவ்வொரு மீட்டர் ஆழத்திலும் மண் மாதிரிகளை சேகரித்து, மண் தொழில் நுட்ப ஆய்வகத்தில் உரிய ஆய்வு செய்யப்பட்டு மண்ணின் தன்மை முழுவதுமாக அறியப்பட வேண்டும்.
மண் கள ஆய்வானது, அடித்தளத்தின் கீழ் மட்டத்தில் இருந்து அடித்தளத்தின் அகலத்தில் ஒன்றரை மடங்கு ஆழம் வரை, கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.