/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
தீத்திபாளையம் மெயின் ரோடு அருகே நிலம் வாங்கலாமா?
/
தீத்திபாளையம் மெயின் ரோடு அருகே நிலம் வாங்கலாமா?
தீத்திபாளையம் மெயின் ரோடு அருகே நிலம் வாங்கலாமா?
தீத்திபாளையம் மெயின் ரோடு அருகே நிலம் வாங்கலாமா?
ADDED : நவ 22, 2025 06:54 AM

தீத்திபாளையம் அருண் நகரில் மெயின் ரோட்டில் இருந்து: -சாந்தகுமார்: கோவையில் இருந்து இதர மாவட்டம் சென்று வரக்கூடிய சாலைகளை சார்ந்த ஏரியாக்கள் என்பது, வளரக்கூடிய பண்புகளை உள்ளடக்கியதாக இருக்கும். தீத்திபாளையம் என்பது, சிறுவாணி மெயின் ரோட்டில் இருந்து பிரிவதால், அதாவது சிறுவாணி என்ற முட்டு இடத்தை அடைந்து, அதன் பிறகு எங்கும் செல்லாத ஒரு ரோடாகும்.
இவற்றின் வளர்ச்சி என்பது, தொடர்ந்து நடந்து கொண்டிருக்கக்கூடிய ஒரு நிகழ்வல்ல. எனவே, முடிவடைந்த அல்லது முடிவடைய இருக்கும் ஒரு வளர்ச்சி கொண்ட பகுதிதான் இது. எனவே, ஒரு சென்ட் இடத்தை ரூ.10 லட்சம் என கணக்கிட்டு கொள்ளவும்.
காரணம்பேட்டையில் இருந்து: - சந்திரசேகரன்: காரணம்பேட்டையில் இருந்து டவுன் பஸ் சவுகரியம் என்ன, எப்படி என்று தெரியவில்லை. திருச்சி ரோடு, காரணம்பேட்டை சந்திப்பில் இருந்து, 3 கி.மீ., தொலைவு என்றும், டவுன் பஸ் போக்குவரத்து உள்ளது என்றும் எடுத்துக்கொண்டால், ஒரு சென்ட் ரூ.6 லட்சம் போகும். மனைப்பிரிவு டி.டி.சி.பி., அங்கீகரிக்கப்பட்டதா? அல்லது கிராமத்தில் நத்தம் பகுதியாக உள்ள மனையா? என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளவும். ஏனென்றால், இன்று மனை வாங்குபவர்கள் வங்கிக்கடன் இலக்கணங்களுக்கான அழுத்தம் கொடுத்து தேடுகின்றனர்.
தகவல்:: ஆர்.எம். மயிலேறு.: கன்சல்டிங் இன்ஜினியர்:

