/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
'மூச்சு விடும் வீடு' எது தெரியுமா? விளக்குகிறார் 'காட்சியா' தலைவர்
/
'மூச்சு விடும் வீடு' எது தெரியுமா? விளக்குகிறார் 'காட்சியா' தலைவர்
'மூச்சு விடும் வீடு' எது தெரியுமா? விளக்குகிறார் 'காட்சியா' தலைவர்
'மூச்சு விடும் வீடு' எது தெரியுமா? விளக்குகிறார் 'காட்சியா' தலைவர்
ADDED : பிப் 07, 2025 10:17 PM

'இயற்கை வழி' வேளாண்மை எவ்வளவு அடிப்படையானதோ, அதேபோல் வழக்கமான நடைமுறை கட்டுமானங்களில் தவிர்க்கப்பட வேண்டியவை ஆற்றுமணல், இயற்கை சூழலை கெடுக்கும் சிமென்ட், மற்றும் இரும்புக்கம்பிகள்.
இவை இல்லாமல் எழுப்பப்படுவதே, துாய இயற்கை கட்டுமானங்கள். மனித நடவடிக்கைகள், அதிக அளவு கார்பன், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்களை, வளிமண்டலத்தில் வெளியிடுகின்றன.
இது உலக வெப்பநிலை உயர்வுக்கு வழிவகுக்கிறது. இதைத் தடுக்க, இயற்கைவழிக் கட்டுமானங்களில் இறங்க வேண்டும் என்கிறார், 'காட்சியா' தலைவர் விஜயகுமார்.
அவர் கூறியதாவது:
இயற்கை கட்டுமானத்தில் சூரிய ஒளி, காற்று, மழை, தட்பவெப்பம், அமைவிடம், கலாசாரம் மற்றும் உள்ளூர் கட்டுமான பொருட்களை ஒருங்கிணைத்து இயற்கை கட்டுமானம் கட்டட அமைப்பு நிர்ணயிக்கப்படுகிறது.
இயற்கை வளங்களை நம்மால் முடிந்தளவு பாதுகாத்திட, இவ்வகையான இயற்கைவழிக் கட்டுமானங்கள் மரபு வீடுகளை கட்ட வேண்டியது காலத்தின் தேவை.
மனித தேவைகளுக்கு மாறாக, மறு சுழற்சி முறையில் வீடுகளை கட்ட என்று தவறினோமோ அன்றே அழிவுகள் ஆரம்பம் ஆனது.
மர வீடு, களி மண் வீடு, மறு சுழற்சி வீடுகள் இயற்கையை காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மண் வீட்டின் சிறப்பு, வெயில் காலத்தில் வீட்டிற்குள் சில்லென்றும், குளிர்காலத்தில் வீட்டிற்குள் வெப்பமாகவும் இருக்கும்.
மண் வீடு மூச்சு விடும் வீடு என்பார்கள். ஆரோக்கியத்தை மட்டுமே கொடுக்கும். கான்கிரீட் வீடுகளை விட வலிமையானது மண் வீடு. சிறந்த பராமரிப்பு செய்யும்போது, அதன் ஆயுட்காலம் பல ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்கும்.
மண் வீட்டிற்கு செலவு கணிசமான அளவு குறையும். இப்போது மக்களிடம் மண் வீட்டைப் பற்றிய விழிப்புணர்வு உருவாகி வருகிறது. இன்னும், 10 ஆண்டுகளில் பெரும்பான்மையான மக்கள் நம் பாரம்பரிய மண் வீட்டுக்கு, திரும்பி விடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மண் கட்டுமான நடைமுறைகளை மேற்கொள்வதன் மூலம், நமது கார்பன் தடத்தை குறைக்கலாம். நிலையான மற்றும் ஆற்றல் திறன் கொண்ட கட்டடங்களை உருவாக்கலாம். இவ்வாறு, அவர் கூறினார்.