/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
ஆலோசனை
/
வீட்டின் ஆயுளை அதிகரிக்கும் 'ஐ.எஸ். கோடு': இது, கட்டடங்களுக்கான அடிப்படை வடிவமைப்பு
/
வீட்டின் ஆயுளை அதிகரிக்கும் 'ஐ.எஸ். கோடு': இது, கட்டடங்களுக்கான அடிப்படை வடிவமைப்பு
வீட்டின் ஆயுளை அதிகரிக்கும் 'ஐ.எஸ். கோடு': இது, கட்டடங்களுக்கான அடிப்படை வடிவமைப்பு
வீட்டின் ஆயுளை அதிகரிக்கும் 'ஐ.எஸ். கோடு': இது, கட்டடங்களுக்கான அடிப்படை வடிவமைப்பு
ADDED : நவ 07, 2025 09:15 PM

வெளியில் உறுதியானதாகத் தோன்றும் பல வீடுகள், சில ஆண்டுகளில் முறிவு, சிதைவு அல்லது சரிவை எதிர்கொள்கின்றன. இந்திய தரநிலைக் கோடுகள்(ஐ.எஸ்.கோடு) பின்பற்றப்படாமையே இதற்கு முக்கிய காரணம் என்கிறார், 'கொஜினா' முன்னாள் தலைவர் ராஜதுரை.
அவர் மேலும் கூறியதாவது:
ஐ.எஸ்.கோடுகள் என்பவை இந்திய தர நிலைகள் கழகம் உருவாக்கிய விஞ்ஞான வழிகாட்டுதல்கள். இவை ஒரு கட்டடத்தை எப்படி வடிவமைப்பது, எந்தப் பொருட்களை பயன்படுத்துவது, எவ்வாறு கட்டுமானம் செய்வது என்பதை தெளிவாக குறிப் பிடுகின்றன.
இதனை பின்பற்றினால், வீடு பலமாகவும், நீடித்ததாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும். ஒரு வீடு பலவித சுமைகளை தாங்க வேண்டும்.
குடியிருப்போர் மற்றும் பொருட்களின் சுமை, காற்றழுத்தம், நிலநடுக்கம், வெப்ப மாற்றத்தால் உண்டாகும் பரிமாற்றங்கள் போன்றவை.
ஐ.எஸ்.கோடுகளின்படி, வடிவமைக்கப்பட்ட வீடுகள் பேரிடர் சமயங்களிலும் உறுதியாக நிற்கும். இந்த கோடுகள் தேவையான அளவில் மட்டுமே, எக்கு மற்றும் கான்கிரீட் பயன்படுத்த வழிகாட்டுகின்றன.
இதனால் வீண் செலவு குறையும், வீட்டின் ஆயுள் அதிகரிக்கும். 'என் வீடு இந்திய தரநிலைக் கோடுகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டதா மற்றும் கட்டப்பட்டதா? என்ற ஒரு கேள்வியே வீட்டின் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் தரமான வாழ்விடம் எனும் மூன்று அடிப்படை துாண்களையும் உறுதி செய்யும். ஐ.எஸ்.கோடுகள் பின்பற்றுவது ஒரு தொழில்நுட்ப விதி முறையாக மட்டுமல்ல; அது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு.
இவ்வாறு, அவர் கூறினார்.

