/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டுமானத்துறையில் பெரிய மாற்றம் வருகிறது! ஏல்லாம் ஏ.ஐ., கைங்கர்யம்தான் என்கிறார் பொறியாளர்
/
கட்டுமானத்துறையில் பெரிய மாற்றம் வருகிறது! ஏல்லாம் ஏ.ஐ., கைங்கர்யம்தான் என்கிறார் பொறியாளர்
கட்டுமானத்துறையில் பெரிய மாற்றம் வருகிறது! ஏல்லாம் ஏ.ஐ., கைங்கர்யம்தான் என்கிறார் பொறியாளர்
கட்டுமானத்துறையில் பெரிய மாற்றம் வருகிறது! ஏல்லாம் ஏ.ஐ., கைங்கர்யம்தான் என்கிறார் பொறியாளர்
ADDED : ஆக 09, 2024 08:56 PM

''ஏ.ஐ.,தொழில்நுட்பம் பயன்படுத்தி, கட்டுமானத் துறையில் பெரியளவு மாற்றம் வரப்போகிறது,'' என்று, ஆச்சரியம் தெரிவிக்கிறார், பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியாவின் கோவை மைய உறுப்பினர் கார்த்திக்.
இதுகுறித்து, இவர் கூறியதாவது:
கட்டடத் துறையில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, துல்லியமாகவும், நுணுக்கமாகவும் கட்டடத்தை கட்டலாம்.
மேற்கூரை அமைக்கும் போது, சில நேரங்களில் அதை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சாரங்கள் விழுகின்றன. அந்த இடத்தில் ஏ.ஐ., தொழில்நுட்பம் பயன்படுத்தி, சாரங்கள் விழுவதை முன்கூட்டியே அறிந்து தடுப்பதற்கு பயன்படுத்தலாம். இதற்கு சாரங்கள் கட்டும் போது, சென்சார்களை (Displacement sensor) பயன்படுத்த வேண்டும்.
ஐந்து முதல் எட்டு சாரங்களை, ஒன்றாக சென்சார் வாயிலாக இணைத்து, அதை புளூடூத் வாயிலாக பிரதான சென்சாருடன் இணைத்து, அதை கிளவுட் வாயிலாக இணையதளத்துடன் இணைக்க வேண்டும்.
அப்போது, மேற்கூரை அமைக்கும் போது, அந்த சென்சார், செட்டில்மென்ட் ஆகும் போது பிரதான சென்சாரில், கம்ப்யூட்டர் வாயிலாக நமக்கு தெரியப்படுத்தும்.
நம் அலுவலகத்தில் இருந்தே கம்ப்யூட்டரில், எந்த சாரமானது செட்டில்மென்ட் ஆகிறது என்பதை அறியலாம். அதை, சைட்டில் வேலை செய்து கொண்டு இருப்பவருக்கு தெரியப்படுத்தி, சாரத்தை பலப்படுத்தலாம்.
இது இணையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், பொறியாளர் அவர் வீட்டில் இருந்தே அதை கண்காணிக்க முடியும்.
இங்கு பயன்படுத்திய சென்சார்களை நாம் திருப்பி எடுத்துக் கொண்டு, அடுத்த புராஜெக்ட் சைட்டுக்கும் சென்று, அதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுபோன்ற சென்சார்களை, ஐரோப்பிய நாடுகளில் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். ஆசிய நாடுகளில் சிலர் இதை, இப்போது தான் செயல்முறைக்கு கொண்டு வந்துள்ளனர்.
உறுதித் தன்மை
சென்சார்களை பயன்படுத்தி கான்கிரீட்டின் உறுதித் தன்மையை அறிய முடியும். இதற்கு பெயர் முதிர்வு மீட்டர் (Mautrity meter). பொதுவாக, கான்கிரீட், அஸ்திவாரம், துாண்கள், உத்திரம், மேற்கூரைக்கு பயன்படுத்தும் போது, அதன் உறுதித் தன்மையை உறுதி செய்ய வேண்டும்.
அதற்கு, பொறியாளர்கள் கான்கிரீட்டின் மாதிரிகள் எடுத்து ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பி உறுதித் தன்மையை தெரிந்து கொள்வார்கள். அதற்கு பதிலாக சென்சார்களை பயன்படுத்தலாம்.
கம்பி கட்டும் போதே, முதிர்வு மீட்டர் எனப்படும் சென்சார்களை, கம்பிகளுடன் இணைக்க வேண்டும். பின், சென்சார்களுடன் உள்ள ப்ளூடூத் வாயிலாக இணையதளத்துடன் கிளவுட் வாயிலாக இணைத்து, கம்ப்யூட்டரில் கண்காணிக்கலாம்.
கான்கிரீட் முடித்த அடுத்த நாளே, நீராற்று செய்யவில்லை என்றால், சென்சார்கள் நமக்கு ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் தெரியப்படுத்தும்.
அதன் உறுதித் தன்மையையும் தெரியப்படுத்தும். சென்சாரின் அளவு மிக சிறியதாக இருக்கும். சென்சார்கள், கான்கிரீட்டின் உள்ளே இருப்பதால், கட்டடத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதே போல், ஏ.ஐ.,தொழில்நுட்பம் பயன்படுத்தி, கட்டுமானத் துறையில் பெரியளவு மாற்றம் வரப்போகிறது.
இவ்வாறு, அவர் கூறினார்.

