/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
'சிப்ஸ்' பயன்படுத்தி விரிசல் தடுக்கலாம்!
/
'சிப்ஸ்' பயன்படுத்தி விரிசல் தடுக்கலாம்!
UPDATED : ஜூலை 06, 2024 03:02 AM
ADDED : ஜூலை 06, 2024 12:15 AM

'கனவு இல்லம்' தொடர்பான, வாசகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கிறார், கோயமுத்துார் மாவட்ட அனைத்து கட்டுமான பொறியாளர் சங்க இணை செயலாளர் பிரேம்குமார் பாபு.
* கோழி வலை கட்டி வேலை செய்யும் போது, கலவை மட்டும் கலந்து பூசினால் போதும் என்கிறார்கள்; அப்படி செய்யலாமா? -
-சரவணன், துடியலுார்.
கோழி வலை கட்டி வேலை செய்யும் போது, கலவையுடன் 'சிப்ஸ்' என்கிற குருணை ஜல்லியை சிறிது சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யும் போது விரிசல்கள் வருவதை தடுக்கலாம். கலவை மட்டும் கலந்து பூசுவதை தவிர்க்கவும்.
* கிச்சனில் ஜன்னல் வைக்கும் போது, எவ்வளவு உயரத்தில் வைக்க வேண்டும்? -
-தினேஷ், அன்னுார்.
கிச்சனில் ஜன்னல் வைக்கும் போது, வீட்டின் தரை மட்டத்திலிருந்து நான்கு அடி உயரத்திலும், டேபிள் டாப்பிலிருந்து ஒரு அடி உயரத்திலும் அமைக்க வேண்டும்.
* காம்பவுண்ட் சுவற்றின் மேல் மட்டத்தில், 'சில் கான்கிரீட்' போட வேண்டுமா?
-அர்ஜுனன், காளப்பட்டி.
கண்டிப்பாக போட வேண்டும். இது, காம்பவுண்ட் சுவரின் உறுதித்தன்மையை அதிகப்படுத்துவதுடன், விரிசல்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இம்முறையை வீட்டின் கைப்பிடிச் சுவற்றிலும் பயன்படுத்தலாம்; மிகவும் நல்லது.
* காலம் போஸ்ட் மற்றும் எலக்ட்ரிகல் பைப் ஜாயின்ட்களில் விரிசலை தடுப்பது எப்படி?
-சுகுமாரன், கணபதி.
காலம் ஜாயின்ட்கள், பீம் ஜாயின்ட்கள் மற்றும் எலக்ட்ரிக்கல் பைப் உள்ள இடங்களில், பைபர் மெஷ் பொருத்தி, அதன் மீது பூச்சு பூச வேண்டும். இது, அனைத்து ஹார்டுவேர் கடைகளிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. அவ்வாறு செய்யும்போது, விரிசல்களை கண்டிப்பாக தவிர்க்கலாம்.