/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
கட்டுமான செலவை கட்டுப்படுத்த உதவும் எப்.ஜி.சி., கம்பிகள்!
/
கட்டுமான செலவை கட்டுப்படுத்த உதவும் எப்.ஜி.சி., கம்பிகள்!
கட்டுமான செலவை கட்டுப்படுத்த உதவும் எப்.ஜி.சி., கம்பிகள்!
கட்டுமான செலவை கட்டுப்படுத்த உதவும் எப்.ஜி.சி., கம்பிகள்!
ADDED : அக் 05, 2024 09:22 PM

இ ன்றைய சூழலில் கான்கிரீட் கட்டடங்கள் கட்டுவதில் துாண்கள், பீம்கள், மேல் தளம் ஆகிய பாகங்கள் மிக உறுதியாக இருக்க வேண்டும். இந்த பாகங்கள் பொதுவாக ஆர்.சி.சி., எனப்படும் கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் போடும் முறையில் தான் கட்டப்படுகிறது.
கட்டடங்களில் ஆர்.சி.சி., முறையில் துாண்கள், பீம்கள், தளம் போடும் பணிகளில் டி.எம்.டி., கம்பிகளையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
இதில் ஒரு கட்டடத்தின் மொத்த அளவு, அதில் ஏற்படும் சுமை ஆகியவற்றை கருத்தில் வைத்து, எத்தகைய கம்பிகளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது முடிவு செய்யப்படுகிறது. குறிப்பாக, ஒரு கட்டடத்துக்கு சுமை பரவலை முறைப்படுத்தும் வகையில் எங்கு, எத்தனை துாண்கள் அமைய வேண்டும்.
இதை இணைக்கும் வகையில் என்ன அளவில் பீம்கள் எப்படி அமைய வேண்டும் என்பது துல்லிய கணக்கு அடிப்படையில் கட்டட அமைப்பியல் பொறியாளர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
கட்டட அமைப்பியல் பொறியாளர் பரிந்துரை அடிப்படையில் கட்டடத்தின் ஒவ்வொரு பாகத்துக்குமான கம்பிகள் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் பெரும்பாலான மக்கள் டி.எம்.டி., கம்பிகளை தான் தேடி பிடித்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கின்றனர்.
இந்த கம்பிகள் எதை அதிகரிப்பதால் கட்டடத்தின் உறுதி அதிகரிக்கும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது. இதை முறியடிக்கும் வகையில் எடை குறைந்த பைபர் கிளாஸ் காம்போசிட் எனப்படும் புதிய வகை கம்பிகள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன.
கட்டமான பணிகளுக்கு வழக்கமாக நீங்கள் வாங்கும் டி.எம்.டி., பார்களுக்கு ஆகும் செலவைவிட, 45 சதவீதம் வரை இதில் செலவு குறையும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
குறிப்பாக, டி.எம்.டி., கம்பிகளை பயன்படுத்தும் போது குறிப்பிட்ட சில இடங்களில் தண்ணீரில் காணப்படும் உப்பு காரணமாக இதில் துரு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.
பைபர் கிளாஸ் காம்போசிட் கம்பிகளில் துரு ஏற்படும் வாய்ப்பு இல்லை என்பதுடன் இது எடை குறைந்த பொருளாக இருப்பதால், கட்டடத்தின் ஒட்டுமொத்த சுமையை அதிகரிக்காது.
இதனால், அதிக உயரமான கட்டடங்கள் கட்டுவதற்கு இந்த எப்.ஜி.சி., கம்பிகள் மிக முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளன.
அடிப்படையில் இது எடை குறைவாக இருப்பதால், சுமை தாங்கும் திறனின் குறைபாடு இருக்குமோ என்ற சந்தேகம் எழுவது இயற்கை தான்.
வழக்கமான டி.எம்.டி., கம்பிகளை காட்டிலும் இதில் சுமை தாங்கும் திறன் மிக அதிகமாக இருப்பது ஆய்வக சோதனைகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
நம் நாட்டில் மாற்று கட்டுமான பொருட்களுக்கு வரவேற்பு எப்போது அதிகம் என்றாலும், இதை தயாரிப்பதில் அதிக நிறுவனங்கள் ஈடுபட்டால் தான் பயன்பாடு அதிகரிக்கும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.