/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
முதுகுவலி ஏற்படுத்தாத சமையலறை மேடையை அமைப்பது எப்படி?
/
முதுகுவலி ஏற்படுத்தாத சமையலறை மேடையை அமைப்பது எப்படி?
முதுகுவலி ஏற்படுத்தாத சமையலறை மேடையை அமைப்பது எப்படி?
முதுகுவலி ஏற்படுத்தாத சமையலறை மேடையை அமைப்பது எப்படி?
ADDED : டிச 28, 2024 07:53 AM
புதிதாக வீடு கட்டும்போது, அதன் ஒவ்வொரு பாகமும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கட்டுமானப் பொறியியல் ரீதியாக, சில வரையறைகள் உண்டு. இந்த வரையறைக்கு உட்பட்டுதான் கட்டடத்தின் ஒவ்வொரு பகுதிக்கான வடிவமைப்பும், கட்டுமானப் பணியும் இருக்க வேண்டும்.
இந்த விஷயங்களை கட்டுமானப் பொறியாளர்கள், பணியாளர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று உரிமையாளர்கள் அலட்சியமாக இருக்கின்றனர். இவ்வாறு இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டினால், புதிய வீட்டை பயன்படுத்தும்போது பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
குறிப்பாக, குளியலறை, சமையலறை ஆகியவற்றுக்கான வடிவமைப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பொதுவாக சமையலறை தொடர்பான விஷயங்களில் அதன் மொத்த பரப்பளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில் துவங்கி, பல்வேறு விஷயங்களை துல்லியமாகக் கவனிக்க வேண்டும்.
சமையலறையில் மேடை அமைக்க வேண்டும் என்பதில் பலரும் தற்போது ஆர்வம் காட்டுகின்றனர். இதில், மேடையின் உயரம் தொடர்பான விஷயங்களில் கட்டுமானப் பொறியாளர்கள் பொதுவான அளவைத்தான் கடைப்பிடிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
ஆனால், உங்கள் வீட்டின் சமையலறை மேடையின் உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பது தொடர்பான விஷயங்களில் மிகக் கவனமாக செயல்பட வேண்டும். சமையலறை மேடையின்மீது அமைக்கப்படும் அடுப்பை நின்றுகொண்டு பயன்படுத்துவோருக்கும் முதுகுவலி வராத வகையில் அதன் உயரம் இருக்க வேண்டும்.
இங்கு மேடையின் சரியான உயரம், 34 அங்குலம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதன் அடிப்படையில் சமையலறை மேடையை அமைத்தால், அதை தினசரி பயன்படுத்துவோருக்கு, முதுகுவலி, கழுத்துவலி வருவதை தவிர்க்க முடியும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
சமையலறை மேடையின் உயரம் போன்று அதன் அகலத்திலும் உரிய கவனம் செலுத்த வேண்டும். அடுப்பு உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை வைப்பதற்கும், பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கும் ஏற்ற வகையில், 2 அடி அகலம் இருக்க வேண்டியது அவசியம்.
இத்துடன் சமையலறை மேடையில் கேஸ் அடுப்புதான் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு தேவையான சிலிண்டரை எங்கு வைப்பது என்பதிலும் கவனமாக இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பொறியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
சமையலறையில், மேடையில் எங்கு அடுப்பு வைக்கப் போகிறோம் என்று பார்த்து, அதற்கு ஏற்ற வகையில் சிலிண்டரை வைப்பதற்கான இடவசதியை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமானப் பொறியாளர்கள்.