/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
வீடு கட்ட தரமான தண்ணீர் பயன்படுத்தினால் பல தலைமுறைக்கு நிலைத்து நிற்கும் கட்டடம்
/
வீடு கட்ட தரமான தண்ணீர் பயன்படுத்தினால் பல தலைமுறைக்கு நிலைத்து நிற்கும் கட்டடம்
வீடு கட்ட தரமான தண்ணீர் பயன்படுத்தினால் பல தலைமுறைக்கு நிலைத்து நிற்கும் கட்டடம்
வீடு கட்ட தரமான தண்ணீர் பயன்படுத்தினால் பல தலைமுறைக்கு நிலைத்து நிற்கும் கட்டடம்
ADDED : அக் 18, 2024 10:52 PM

வீடு கட்டுமானத்தில் தண்ணீரே அடிப்படை. நாம் சமையல் செய்ய எப்படி நல்ல தரமான நீரை உபயோகித்து, ருசியான, தரமான உணவு பண்டங்களை செய்கிறோமோ, அதுபோல் நாம் கட்டும் வீட்டிற்கும் நல்ல தரமான நீரை, பயன்படுத்த வேண்டும்.
அப்போது தான் தரமாகவும், நீண்ட காலத்திற்கும், பல தலைமுறைக்கும் கட்டடம் நிலைத்து நிற்கும். அவ்வாறு பயன்படுத்தும் நீரின் தரம், சரியாக இருக்கிறதா என்பதை கட்டடம் கட்டுவதற்கு முன்பாகவே, அரசு அங்கீகாரம் பெற்ற அல்லது அரசால் நடத்தப்படும் ஆய்வகங்களில் தரப்பரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம்.
இதுகுறித்து, 'காட்சியா' உறுப்பினர் ரமேஷ்குமார் கூறியதாவது:
தற்போது நிலத்தடி நீரும், மிகவும் மாசுபட்டு உள்ளது. குறிப்பாக, கோவை மாவட்டத்தில் சில பகுதிகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கட்டுமான பணிகளுக்காக, நாம் செலவழிக்கும் பெரும் தொகையில் நீர் பரிசோதனைக்கு குறைவாகவே செலவாகும். ஆகவே ஆய்வு செய்து பயன்படுத்துவது மிகவும் நல்லது. தரம் சரியாக இருந்தால்தான் அது சிமென்ட் மற்றும் கம்பிகளுடன் சேரும்போது, தீமை விளைவிக்காமல் இருக்கும்.
முக்கியமாக, கம்பிகளை துருப்பிடிக்காமல் செய்வதற்கும், உப்புத்தன்மை படிந்து நம்முடைய கட்டட பாகங்கள் மற்றும் கட்டடத்தில் பயன்படுத்தும் பொருட்களை, நாளடைவில் உறுதி இழக்காமல் இருக்க செய்வதற்கும் ஏதுவாக இருக்கும்.
இப்பொழுது பல கட்டடங்களில் உள்ள கம்பிகள் துருப்பிடித்து, 'கான்கிரீட்' மற்றும் பூச்சு பாகங்கள் பெயர்ந்து விழுவதாலேயே சேதம் அடைகின்றது.
டைல்ஸ் மற்றும் கிரானைட் கற்களில் உப்பு படிவதும், குழாய்கள் மற்றும் கழிவறையில் உள்ள 'பிட்டிங்' பொருட்களில், உப்பு படிவதும் பெரும் பிரச்னையாக உள்ளது.
இதை தடுக்க, தரமான நீரை பயன்படுத்தி நீடித்த, உறுதியான கட்டடம் அமைத்திடலாம். நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க, நம் வீட்டின் கழிவு நீரை, நேரடியாக நிலத்தினுள் விடுவதையும், ஆழ்துளை கிணறு அருகே கழிவுநீர் தொட்டிகளை அமைப்பதையும், தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.