/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ் மின்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!
/
சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ் மின்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!
சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ் மின்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!
சிங்கிள் பேஸ், த்ரீ பேஸ் மின்சாரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க!
ADDED : அக் 25, 2025 12:07 AM

மி ன் இணைப்பு என்பது கனவு இல்லத்துக்கு, ஒளி வீசும் அம்சம். முக்கியமான பணி இது. மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும்போது மின் திறன், பிளக் பாய்ன்ட் என அனைத்தையும் கணக்கிட்டு, மொத்த தேவையை அதற்குரிய படிவத்தில் விளக்க வேண்டும் என்கிறார், 'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ்.
அவர் மேலும் கூறியதாவது:
'சிங்கிள் பேஸ்' என்றால், ஒரு வழி மின் இணைப்பு முறை. இதில் மின்சாரம் ஒரு கம்பியின் மூலம் வினியோகிக்கப்படுகிறது. 4,000 வாட்ஸ்க்கு குறைவான மின் தேவைக்கு இந்த இணைப்பு கொடுக்கப்படுகிறது.
'த்ரீ பேஸ்' முறையில், மூன்று கம்பிகளின் வாயிலாக மின்சாரம் வழங்கப்படுகிறது. இதற்கு நான்கு கம்பிகள் இணைப்பு தேவை. அவற்றில் ஒன்று நியூட்ரல்; 4,000 வாட்ஸ்க்கு மேல் இந்த இணைப்பு அவசியமாகிறது.
தனி மின் அமைப்புகளுக்கு, போதுமான திறன் கொண்ட மெயின் பியூஸ், ஸ்விட்ச் பொருத்தப்பட வேண்டும். ஸ்விட்ச் கைக்கு எட்டும் உயரத்தில் பொருத்தப்பட வேண்டும்.
மூன்று வழி இணைப்புக்கு ஒரு மெயின் ஸ்விட்ச்சும், மூன்று பேஸ்க்கு தனியே ஸ்விட்ச்களும் அல்லது 'டிஸ்ட்ரிபியூஷன் போர்டும்' பொருத்த வேண்டும்.
ஒரு மின் வழி, பல மின் சுற்றுகளாக, 'சர்க்கியூட்' பிரிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு சுற்றும், 800 வாட்ஸ்க்கு மேல் இருக்கக்கூடாது.
இம்முறையிலான டிஸ்ட்ரிபியூஷன் போர்டு, மெயின் போர்டில் இருக்க வேண்டும். ஒவ்வொரு சர்க்கியூட்டிலும் மின்சாரத்திற்கு ஏற்ப, மின் கம்பி இணைக்க வேண்டும்.
சுவிட்ச் போர்டில் எல்லா பிளக்குகளும், மூன்று பின்களை கொண்டிருப்பது நல்லது. எர்த் முனைகளை மெயின் எர்த் அமைப்புடன் இணைப்பது அவசியம். அலமாரிகளுக்கு கதவில் ஸ்விட்சுடன் கூடிய விளக்கு பொருத்துதல் நல்லது.
சமையல் அறையில் எல்லா விளக்குகளும், வேலை செய்யும் எல்லா இடத்திற்கும் நிழல் விழாத வண்ணம் அமைக்க வேண்டும். குளியல் அறையில் விளக்கை மேல் தளத்தில் பொருத்தி, அதற்கான ஸ்விட்ச்சை வெளியே பொருத்த வேண்டும்.
தேவையான இடங்களில், பிளக் பாயின்ட் இருக்க வேண்டும். பிளக் சாக்கட்டுகள் மின் சாதனங்களுக்கு நடுவில் இருக்கக்கூடாது. தரையில் இருந்து, 125 செ.மீ., அல்லது, 130 செ.மீ., உயரத்தில் இருக்க வேண்டும். எந்த மின் சாதனங்களை, எங்கு வைக்கலாம் என்கிற முன்யோசனை இருந்தால், ஒயரிங் சுலபமாக இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

