/
வாராவாரம்
/
கனவு இல்லம்
/
சிறப்பு கட்டுரை
/
'மிவான்' வந்தாச்சு; இனி கவலை ஏன்? கட்டுமானத்தை வேகமாக முடிக்கலாம்
/
'மிவான்' வந்தாச்சு; இனி கவலை ஏன்? கட்டுமானத்தை வேகமாக முடிக்கலாம்
'மிவான்' வந்தாச்சு; இனி கவலை ஏன்? கட்டுமானத்தை வேகமாக முடிக்கலாம்
'மிவான்' வந்தாச்சு; இனி கவலை ஏன்? கட்டுமானத்தை வேகமாக முடிக்கலாம்
ADDED : ஆக 29, 2025 09:20 PM

க ட்டுமான பணிகளின்போது செங்கல், எம்.சாண்ட், ஜல்லி போன்றவற்றை ரோட்டோரம் குவித்து, அவைகளை பயன்படுத்தி கட்டுமானம் செய்வது கடும் சிரமமாகிவிட்டது. இதுசாலையில் செல்வோருக்கும் இன்னலாகவும் மாறிவிட்டது.
கூடுதல் வேலையாட்களை வைத்து உள்ளே பொருட்களை கடத்துவதும், மேல் தளங்களுக்குஉயர்த்தி செல்வதும், கட்டுமான செலவை மேலும் அதிகப்படுத்துகிறது. இப்பிரச்னைக்கு தீர்வாக, புதிதாக வந்துள்ளது, 'மிவான்' தொழில்நுட்பம்.
இது, செங்கல் கட்டுமானத்திற்கு மாற்று;அலுமினிய பேனல்களை பயன்படுத்தி 'பிரேம் வொர்க்' செய்து கான்கிரீட் சுவர்களை வார்க்கும், நவீன கட்டுமான முறை என்கிறார், 'காட்சியா' செயற்குழு உறுப்பினர் ஜெயபிரகாஷ்.
அவர் மேலும் கூறியதாவது...
இந்த தொழில்நுட்பத்தால், நல்ல வலுவூட்டப்பட்ட கான்கிரீட் பயன்படுத்தப்பட்டு, சமமான பரப்புடையதரம் மிகுந்த சுவர்களையும், கூரை அமைப்பையும் பெறலாம்.
ஒரு தளம் முழுவதற்கான 'பிரேம் வொர்க்' செய்து, ஒரே கான்கிரீட் வார்ப்பின் வாயிலாக ஒரே நாளில் ஒரு தளத்தின் அனைத்து சுவர்களையும், கூரையையும் உருவாக்க முடிகிறது.
இந்த அலுமினிய பேனல்களை, இலகுவாக பயன்படுத்தலாம். கட்டுமானநாட்களை வெகுவாக குறைக்கிறது. சமமான, சீரான பரப்பு கொண்ட சுவர்கள் கிடைப்பதால், சுவர் பூச்சு தேவைப்படுவதில்லை. நேரடியாக பட்டியும், அதைத்தொடர்ந்து வண்ண பூச்சு வேலைகளும் செய்து கொள்ளலாம்.
'பிரேம் வொர்க்' செய்யப்படும் போதே எலக்ட்ரிக்கல், பிளம்பிங் போன்ற இதர வேலைகளும் சேர்த்தே முடிக்கப்பட்டு விடுகிறது. இதன் வாயிலாக மனித ஆற்றலும், பணமும் மிச்சமாகிறது. சுவர் கான்கிரீட்டுக்குஇடையே,பி.வி.சி., பைப்களை குறிப்பிட்ட இடைவெளியில் தொடர்ச்சியாக அமைக்கலாம்.
இதனால், கான்கிரீட்டின் அளவு குறைவதுடன்,வெப்ப காப்பு வாயிலாக உட்புற வெப்பத்தையும் குறைக்க முடியும். மிவான் தொழில்நுட்பத்தால்தரமான கட்டடம் அமைவதுடன்,நில அதிர்வை தாங்குவதும் கூடுதல் நன்மை.
நீர்க்கசிவு, ஓதம் போன்ற குறைகள் தவிர்க்கப்படுகின்றன. இதற்கு தேவையான 'சோபிட் கார்னர்'கள், 'பீம் சோபிட் பேனல்'கள் போன்ற பொருட்களைக் கொண்டு, பிரேம் வொர்க் செய்யப்படுகிறது.
இதில் குறை என்னவெனில், ஆரம்ப முதலீடு சற்று அதிகம். நிறைய கட்டடங்களைஇம்முறையில் உருவாக்கும்போது செலவுகுறைய வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.