sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கனவு இல்லம்

/

சிறப்பு கட்டுரை

/

கட்டட வகைகளும் வீடு வாங்கும்போது கேட்டு பெற வேண்டிய ஆவணங்களும்!

/

கட்டட வகைகளும் வீடு வாங்கும்போது கேட்டு பெற வேண்டிய ஆவணங்களும்!

கட்டட வகைகளும் வீடு வாங்கும்போது கேட்டு பெற வேண்டிய ஆவணங்களும்!

கட்டட வகைகளும் வீடு வாங்கும்போது கேட்டு பெற வேண்டிய ஆவணங்களும்!


ADDED : ஜன 03, 2025 11:40 PM

Google News

ADDED : ஜன 03, 2025 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டடங்களில் இவ்வளவு வகைகள் இருக்கிறது என்றால், ஆச்சரியம் ஏற்படுவது மட்டுமின்றி, அவை குறித்து அறிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது. இன்றைய காலகட்டத்தில் கட்டுனர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில், கட்டட விதிகள் உள்ளன.

அதேசமயம், விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வுடன் இருந்தால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கலாம். கட்டட வரைபடத்தின்படி, கட்டடத்தை அமைத்து, விதிமீறல்களை தவிர்ப்பது நல்லது. வரைபடம் என்பது கட்டடத்தின் மூச்சாக திகழ்கிறது.

அதிலும், பல வகையான வரைபடங்கள் இருப்பது, பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். பவுண்டேஷன் டிராயிங், ஸ்டிரக்ச்சுரல் டிராயிங், புளோர் பிளான், லிண்டல் டிராயிங், ரூப் டிராயிங், பிளம்பிங் டிராயிங், எலக்ட்ரிக்கல் டிராயிங், எலிவேஷன் டிராயிங், பர்னிச்சர் லே-அவுட், வொர்க்கிங் பிளான், சம்ப் பிளான், செப்டிங் டேங்க் பிளான், படிக்கட்டு பிளான், சுற்றுச்சுவர் டிசைன் என, பல வகைகளில் உள்ளன.

கட்டடம் வாங்கும்போது, இந்த ஆவணங்கள் அனைத்தையும் கேட்டு வாங்கி, அதனை சரி பார்த்து வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல் கட்டடம் விஷயங்களிலும் கவனமாக இருந்து வாங்குவது நல்லது.

பொதுவாக தரைதளம், முதல் தளம் உள்ள கட்டடம் சாதாரண கட்டடம் எனப்படும். சிறப்பு கட்டடம் என்பது தரைதளம், முதல் தளம், இரண்டாம் தளம், மூன்றாம் தளங்களை கொண்டதாகும்.

குடியிருப்புக்காக மற்றும் வணிகத்திற்காக கட்டப்படும் கட்டடம், ஆறு குடியிருப்புகள் கொண்ட கட்டடம், 3,000 சதுரடிக்கு கூடுதலான பரப்பளவு கொண்ட கட்டடம் ஆகியன, சிறப்பு கட்டடம் எனப்படுகிறது.

நான்கு தளங்களுக்கு மேலும், 50 அடி உயரத்திற்கு குறைவான கட்டடம் என்பதும், பலமாடி கட்டடம் எனப்படுகிறது.






      Dinamalar
      Follow us