தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/ஒரு ஊர்ல ஒரு பாட்டி

ஒரு ஊர்ல ஒரு பாட்டி

ஒரு ஊர்ல ஒரு பாட்டி


PUBLISHED ON : ஜூன் 18, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'நான் மலையாளி. எழுத்தாளர் கே.பி. நீலமணிக்கு 1958ல் மணைவியாகி தமிழக மருமகள் ஆயிட்டேன்!'

சென்னை, மந்தைவெளியில் 'லியோ' வாடகை நுாலகத்தை நடத்தி வருகிறார் 84 வயதான இந்த ஜானகி நீலமணி.

நுாலக வாழ்க்கை

அப்போ அவர் பிரபல பத்திரிகையில வேலை பார்த்துட்டு இருந்தார். பாலக்காடு பள்ளியில ௬வது வகுப்பு தாண்டாத நான் பிழையில்லாம தமிழ் வாசிக்கிறதைப் பார்த்துட்டு, 'நீயும் எழுது'ன்னு தட்டிக் கொடுத்தார். 1985ல இந்த வாடகை நுாலகத்தை துவக்கினோம்.

இன்னைக்கு 2,750 உறுப்பினர்கள் இருக்குறாங்க; இதுல, 90 சதவீதம் பெண்கள். 488 தமிழ் எழுத்தாளர்களோட புத்தகங்கள் இங்கே இருக்கு. 1999ல அவர் தவறினதுக்கு அப்புறம் நுாலகமே என் வாழ்க்கைன்னு ஆயிடுச்சு.

கவுரவமான வாழ்க்கை

சிறுவர் இலக்கிய எழுத்தாளரான என் கணவரோட படைப்புகளை நாட்டுடைமையாக்கி 2010ம் ஆண்டுல 5 லட்சம் ரூபாய் வெகுமதி தந்தார் கருணாநிதி. 'தமிழறிஞர்' வாரிசு ஓய்வூதியம், இலவச பஸ் பாஸ் தந்தாங்க ஜெயலலிதா. உழைச்சு சாப்பிடுறதால திருப்தியா இயங்குறேன். இதுவரைக்கும் ஆறு குழந்தைகள் நாவல், 75 சிறுகதைகள் எழுதியிருக்கேன். எல்லா படைப்புகளையும் புத்தகமாக்கணும்னு ஆசை.

வாழ்த்துகள் பாட்டி!

பாட்டி சொல்லை தட்டாதே: புத்தகத்தை நேசிக்கப் பழகுங்க; வாழ்க்கை அர்த்தமுள்ளதா தெரியும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us