தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஜூன் 25, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 25, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நீரில் இறங்கி விட்டால்... மீன்; மிதிவண்டி ஏறி விட்டால்... புயல்;

நிலத்தில் கால் பதித்தால்... முயல்;

களம் எதுவோ அதற்கேற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் இவர் ஆர்த்தி சுவாமிநாதன். 2019 டிசம்பர், உலக அளவிலான 'ட்ரையத்லான்' போட்டியில் 'அயர்ன்மேன்' பட்டம் வென்றிருக்கும் இந்தியாவின் முதல் 'வீகன்' வீராங்கனை.

'பிற உயிரினங்களுக்கான உணவுகளை நாம எடுத்துக்கிறது பாவம். 'தேன் கூட நமக்கானது இல்லை'ங்கிறது என் எண்ணம். தவிர, நம்மோட உடல் வலிமை கூட்ட 'வீகன்'னு சொல்லப்படுற தாவர உணவுகளே போதும். இதற்கு நானே சாட்சி!' என்பவர், 3.8 கி.மீ., நீச்சல்; 180 கி.மீ., சைக்கிளிங்; 42.2 கி.மீ., ஓட்டம் கொண்ட 'ட்ரையத்லான்' போட்டியில் 'அயர்ன்மேன்' பட்டம் வென்றிருக்கும் 34 வயது சென்னை பெண்.

வெற்றி தவறும் சூழல்; மனம் என்ன சொல்லும்?

தொடர்ந்து ஓடச் சொல்லும். 2019 அக்டோபர்; 'வேர்ல்டு சாம்பியன்ஷிப்' போட்டிக்கு முந்தையகளம்; கோவா கடல்ல இறங்கின சில நிமிடங்கள்ல ஜெல்லி மீன் இடது கையில கடிச்சிருச்சு; அந்த வலியோட 1.9 கி.மீ., துாரம் ஒரு கையாலேயே நீந்தி வந்தேன்.

தொடர்ந்து சைக்கிளிங் பண்ணினப்போ ஒரு விபத்து; உடம்பெல்லாம் ரத்த காயம்; 'என்னால முடியாது'ன்னு சொல்ல காரணம் இருந்தும், 4 கி.மீ., துாரம் சைக்கிளை துாக்கிட்டு கடந்தேன். அடுத்ததா ஓட்டம்... இதுல, ரெண்டாவது இடம். அன்னைக்கு தோல்வி தான்; ஆனாலும், 'முடியாது'ன்னு நான் ஒதுங்கலை!

கல்லுாரி காலம் வரை போட்டிகள் பலவற்றில் வெற்றியாளரான ஆர்த்தி, குடும்பத்தின் சில சூழல்களால் இந்த அடையாளத்தை இழந்திருக்கிறார். ஒருநாள், 'நீ யாருன்னு தெரியுதா?' என, 85 கிலோ ஆர்த்தியை நிலைக்கண்ணாடி கேட்க, 29 வயதில் மீண்டும் ஓட்டம் ஆரம்பம்.

'உருவ கேலி' தாக்குதல் அனுபவம்?

மன்னிக்கணும்; கசப்புகளை உடனே விழுங்கி செரிச்சுடுற பழக்கம் இருக்கிறதால, அந்த நினைவுகள் என்கிட்டே இல்லை!

'எண்ணம் போல் வாழ்க்கை' - உண்மையா?

வாய்ப்புகளை ஏற்படுத்திக்கவும் ஊக்கம் பெறவும் பெண்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு, 'தன்னம்பிக்கை' மட்டும்தான். மனம் உடையுற சூழல்ல, 'உன்னால முடியும்'னு மனசுகிட்டே சொல்லணும்; அப்போ, உடம்புக்கு பெரும் பலம் கிடைக்கும்.

வாழ்க்கையை நிறைவா உணர்றீங்களா?

என் தோழிக்கு, 'வீகன் அயர்ன்மேன்' ஆகணும்னு கனவு. அந்த கனவு நிஜமாகுறதுக்குள்ளே அவ காலமாயிட்டா! அவளோட கனவை நான் சுமந்தேன். இன்னைக்கு நான்... வீகன் அயர்ன்மேன்.

ஆர்த்தி சுவாமிநாதனின் புதுப்புது அர்த்தங்கள்!

வெற்றி? - அலை

காயம்? - கண்ணாடி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us