தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/திருமதி விவசாயி!

திருமதி விவசாயி!

திருமதி விவசாயி!


PUBLISHED ON : மே 21, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 21, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' - இச்சிந்தனையை வாழ்க்கையாக மாற்றிக் கொண்ட பின்னரே, விவசாய தம்பதியினரான இளங்கோவன் - கவிதா வாழ்வில் புது அத்தியாயம் துவங்கியது. 'விவசாய குடும்பத்துல பிறந்துட்டா ஏழையாவேதான் சாகணுமா?' - இளங்கோவனின் இக்கேள்விக்கு கவிதாவும் விடை தேடினார்.

தேடலில் கிடைத்தது?



எங்க, 3 ஏக்கர் நிலத்துல விளையுற பொருட்கள்ல இருந்து மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்க, 2013ம் ஆண்டு 'அவ்வை' நிறுவனத்தை துவக்கினோம்.

விவசாய கண்காட்சிகள்ல தவறாம ஸ்டால் போட்டு வாடிக்கையாளர்களையும், 'விவசாயி ஏழையா சாகக்கூடாதுன்னா, மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்புதான் தீர்வு'ங்கிற அனுபவத்தையும் சம்பாதிச்சோம்.

நெல்லிக்காய் மூலம் நெல்லிப்பொடி, நெல்லி காரப்பொடி, நெல்லி வற்றல், நெல்லி பற்பொடி, நெல்லிச்சாறு, நாட்டு சர்க்கரை/ தேனில் ஊற வைத்த அவித்த நெல்லி எனும் மதிப்புக்கூட்டு பொருட்களை தயாரிக்கும் கவிதா, விற்பனைக்கு அவசியமான அரசு அங்கீகாரங்களையும் முழுமையாக பெற்றிருக்கிறார்.

விவசாயமும் வாழ்க்கையும்



எங்க வயல்ல மாப்பிள்ளை சம்பா ரக நெல் மட்டும்தான்; எங்க தேவைக்கு போக மீதியை இடைத்தரகர்கள் உதவியில்லாம நேரடியா விற்பனை பண்ணி சம்பாதிக்கிறோம். வீட்டுத் தேவைக்காக மரச்செக்குல ஆட்டின கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பருப்பு எல்லாத்தையும், பண்டமாற்று முறையில நெல் கொடுத்து வாங்கிக்கிறோம்.

விவசாயிக்கு மனைவியாக இருப்பதென்பது?



வரம்; பொதுவா, மனசளவுல அவ்வளவு சீக்கிரமா சோர்ந்து போகாதவங்க விவசாயிகள். ஆனா, இயற்கை வஞ்சிக்கிறப்போ உடைஞ்சு போயிடுவாங்க. அந்தசமயத்துல, கணவனை மட்டும் நேசிக்கிற சராசரி மனைவியா ஆறுதல் வார்த்தைகளோட நிறுத்திடாம, கணவனோட சேர்த்து விவசாயத்தையும் நேசிக்கிற மனைவியா நகைகளை கழற்றி தரணும். நான் அப்படிப்பட்ட மனைவி.

விவசாயிக்கு விவசாயம் என்ன தரும்?



திட்டமிட்டு உழைச்சா சகலத்தையும் தரும். எங்க மூத்த மகன் தொல்காப்பியன் சித்த மருத்துவம் படிக்கிறார்; இளைய மகன் கதிரவன், இளங்கலை ஊட்டச்சத்து அறிவியல் படிக்கிறார். எங்களோட இந்த உயரத்துக்கு காரணம்... விவசாயம்.

* தஞ்சாவூர் - வேளாங்கண்ணி சாலையில் இருக்கிறது கவிதாவின் தெற்கு புளியக்குடி கிராமம். தஞ்சாவூரில் இருந்து 25 கி.மீ.,

கவிதா இளங்கோவன்



வயது: 46

படிப்பு: பிளஸ் 2

ஆசை: நிறுவனத்தை நல்லா வளர்க்கணும்

அரசுக்கு ஒரு கேள்வி



ஓட்டையை அடைக்கிற மானியத்தை விட, ஓட்டை விழாம தடுக்குற ஊக்கத்தொகைக்கு முக்கியத்துவம் தருவீங்களா?

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us