தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண் பார்வை

பெண் பார்வை

பெண் பார்வை


PUBLISHED ON : ஏப் 23, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 23, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தஞ்சாவூர் - பேராவூரணி, நாட்டாணிக் கோட்டையைச் சேர்ந்த 32 வயது 'காசு' கதிரேசன் பற்றி நாம் அறிந்தவரையில்... பழங்கால நாணயங்கள்/ பொருட் கள் சேகரிப்பாளர்; இதனால், ஊடக வெளிச்சம் பெற்றவர்! அவரது வீட்டு பெண்கள் பார்வையில்...

* அம்மா - டானியா 'காசு கதிரேசனோட அம்மா' - கவுரவமா உணர்றீங்களா?

நானும் என் கணவரும் தேங்காய் மட்டை உரிக்கிற கூலிங்க; இந்த அடையாளத்தோட தான் என் பசங்க ரெண்டு பேரையும் வளர்த்தோம். 'காசு கதிரேசன் அம்மா'ங்கிற அடையாளத்தால துளி பிரயோஜனம் கிடையாது!

கடவுள் புண்ணியத்துல வீடு, வாசல், சாப்பாடு இருக்கு! இந்த நாணய மூட்டைகளோட இவன் ஆட்டோவுல அலையுறப்போ மனசு வேதனைப்படும். அப்போ, அவன்கிட்டே கேட்பேன்...

'சம்பாதிக்க வேண்டிய வயசுல நேரத்தை இப்படி வீணடிக்கிறியேப்பா...'

'இது அப்படியில்லம்மா... என் மூலமா பழம்பெருமையை மாணவர்கள் தெரிஞ்சுக்கிறாங்க!'

'வேற ஏதாவது தொழில் பண்ணலாமேய்யா...'

'அம்மா... பி.ஏ., தமிழ் முடிச்சு நிறைய போட்டித் தேர்வெழுதினேன்; அரசு உத்தியோகம் கிடைச்சிருச்சா; ஏழு வருஷமா ஸ்கூட்டர்ல டீ விற்கிறேன்; ஆறு மாசமா ஆட்டோ ஓட்டுறேன்!'

அவன் சிரிச்சுக்கிட்டே சொன்னாலும் அவனுக்குள்ளே இருக்குற விரக்தியை என்னால உணர முடியும்!

* அண்ணி கனிமொழி நீங்க பெருமைப்படுறீங்களா கனி மொழி?

இது பெருமையான்னு தெரியலை; ஆனா, சின்ன நிறைவு இருக்கு! இதனாலதானோ என்னவோ, நாணய மூட்டையை துாக்கிட்டு அவர் பள்ளி கண்காட்சிகளுக்கு போயிட்டு வர்றதுக்காக, என் கணவரோட தங்கச்சங்கிலியை அடமானம் வைச்சு பழைய ஆட்டோ வாங்கியிருக்கோம்!

என்ன... பணத்தேவை சமயங்கள்ல ஓட்டை காலணாக்களை பார்க்குறப்போ மனசு கொதிக்கும். 'இது, 100 வருஷத்துக்கு முந்தைய பித்தளை படி'ன்னு இரும்புக்கடையில 600 ரூபாயை செலவு செஞ்சிட்டு வந்து கொழுந்தன் நிற்கிறப்போ, அந்த காசுல அரை மூட்டை அரிசி வாங்கியிருக்கலாமேன்னு தோணும்!

'தஞ்சாவூர் மாவட்டத்தில் 250க்கும் மேலான பள்ளிகளில் நாணய கண்காட்சி நடத்தி, 20 ஆயிரத்திற்கும் மேலான மாணவர்களின் அறிவு பெருக உதவி இருக்கிறேன்' எனும் பெருமிதம் கொண்டிருக்கிறார் 'காசு' கதிரேசன்.

கதிரேசனுக்கு ஏன் கல்யாணம் பண்ணி வைக்கலை?

வர்றவங்க 'டீ வியாபாரமா'ன்னு தயங்குறாங்க; 'நாணயம் சேகரிக்கிற வயசா இது'ன்னு சிரிக்கிறாங்க! 'பட்டதாரி பெண்தான் வேணும்'னு எதிர்பார்த்த என் மகன், '10வது வகுப்பு படிச்சிருந்தாலும் பரவாயில்லை'ன்னு சொல்லிட்டான்; தேடிட்டு இருக்குறோம்.

கதிரேசன் கருத்து?

'நான் சேர்த்து வைச்சிருக்கிறது செல்லாக்காசு இல்லை; பொக்கிஷம்'னு எல்லாரும் உணர்ற நாள் சீக்கிரம் வரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us