தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை

பெண்மை என் பெருமை


PUBLISHED ON : அக் 16, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார், காட்டுமன்னார்கோவில் மங்கையர்க்கரசி; அமெரிக்க எழுத் தாளரான செரில் ஸ்ட்ரேய்டு; இவ்விருவரின் வாழ்க்கை அனுபவங் கள் வெவ்வேறானவை என்றாலும் சொல்லும் செய்தி ஒன்றுதான்!

நம் கேள்விகள் அனைத்திற்கும், 'பளிச்'சென பதில்களை எழுதி நீட்டினார் மங்கை.

உங்களோட குழந்தை பருவம் எப்படிப்பட்டது?



அப்பாவும், அம்மாவும் விவசாயக் கூலிகள். அக்கா, தம்பியோட என் 10 வயசு வரைக்கும் சந்தோஷமாத்தான் இருந்தேன். காய்ச்சல் மருந்தோட வீரியம் என் செவித்திறனை பாதிக்க, குடும்பத்துல ஒரு மரணம் தந்த அதிர்ச்சி பேச்சுத்திறனை பறிச்சிடுச்சு!

செரில் ஸ்ட்ரேய்டின் இளம் வயதில் அவரது தாய் புற்றுநோயால் உயிரிழக்க, அந்த இழப்பு தந்த மன அழுத்தம் தீய வழிகளுக்கு வழிகாட்டுகிறது; தனக்குத்தானே கசந்து போனார் செரில். நம் மங்கையர்க்கரசி அவ்வாறு இல்லை!

மங்கைக்கு என்னென்ன சவால்கள்?



மனசுல இருக்கிறதை பேச முடியாம மனசுல தேக்கி தேக்கி மன அழுத்தமாகி ஆவேசமா நடந்துக்க ஆரம்பிச்சிட்டேன். நான் மீண்டு வர உதவினது என் கல்விதான். 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுல பள்ளியில முதல் மாணவியா வந்தேன். கோவை, பி.எஸ்.ஜி., பொறியியல் கல்லுாரியில மெரிட்ல இடம் கிடைச்சது!

செரில் ஸ்ட்ரேய்டு தன்னை மீட்க, 'பசிபிக் கிரெஸ்ட் டிரெய்ல்' எனும் உயிர்ச்சவால் கொண்ட 2,650 மைல்கள் நீளப் பாதையில் தனித்து நடக்க முடிவு செய்கிறார். மங்கையர்க்கரசி வெற்றிகரமாக பட்டம் பெறுகிறார்; கருவிகள் உதவியோடு சப்தங்களை உணரத் துவங்குகிறார்; தீவிரமாக வேலை தேடுகிறார்.

தவறான மனிதர்கள், விஷப்பூச்சி கடிகள், இயற்கை சீற்றங்கள், உடல் உபாதைகள், கடந்தகால குற்றவுணர்ச்சிகள் அனைத்தையும் எதிர்கொண்டு, பயணத்தின் 94வது நாளில் 1,100வது மைல் தொடுகிறார் செரில் ஸ்ட்ரேய்டு.

நமக்கான வெளிச்சம் நம்மைத் தேடி வருமா?



தீவிரமான தேடல் இருந்தா நிச்சயம் தேடி வரும். இப்படித்தான், 'சேத்னா' அமைப்புல நான் தன்னார்வலர் ஆனேன். 'கற்றல் சவால்' குழந்தைகள் தொட்டு உணரக்கூடிய கதை புத்தகங்கள் உருவாக்கத்துல பங்காற்றினேன். இப்பணி மூலமா நம்ம இழப்புகள், இயலாமையை ஒரு செயல் மாத்திரும்னு உணர்ந்தேன்! இப்போ, எனக்கு 30 வயது; நான் யாரு, என் பயணம் எது, என் வாழ்வின் நோக்கம் எல்லாம் எனக்குத் தெரியும்!

இழப்புகளின் வலியை வேறொரு வடிவத்திற்கு மாற்றியதுடன், பள்ளத்தாக்கில் சரிந்த வாழ்வை தோள்களில் சுமந்து மேல் வந்த விதத்தில் மங்கையர்க்கரசிக்கும், செரில் ஸ்ட்ரேய்டுக்கும் வித்தியாசமில்லை.

மங்கையர்க்கரசியின் புதுப்புது அர்த்தங்கள்



* இழப்புகள்? - தழும்புகள்* ஒலி? - மொழி* கல்வி? - துணை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us