தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/கண்ணம்மா/அவளே சரணம்/பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!

பெண்மை என் பெருமை!


PUBLISHED ON : ஜூன் 11, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 11, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'அந்த 20ம் நம்பர் பனியன் போட்டிருக்கிறது என் மக!' - 'அவ எங்க கிராமத்து பொண்ணு!' - 'என் கூட படிச் சவ!' - 'என் மாணவி தான்!' - இப்படி, இந்திய பெண்கள் கால்பந்து அணி வீராங்கனை கார்த்திகா அங்கமுத் துவை கொண்டாடி பெருமை கொள்கின்றன உறவுகளும் சுற்றமும்!

முடிவுகள் எடுப்பதில் கார்த்திகா எப்படி?

'உன்னோட பழைய ஷூவை எனக்கு தர முடியுமா'ன்னு தோழிகிட்டே கேட்குறதுக்கு அவ்வளவு கூச்சப்பட்டேன். 'சாப்பாட்டுக்கே கஷ்டம்; இந்த விளையாட்டெல்லாம் நமக்கு வேண்டாம்மா'ன்னு அம்மா சொன்னப்போ, 'அடம் பிடிக்கக் கூடாது'ன்னு அமைதியா இருந்தேன். இப்போ, இந்த அடையாளத்தோட நிற்கிறேன். நீங்க சொல்லுங்க... முடிவுகள் எடுக்கிறதுல கார்த்திகா எப்படி?

சேலம், குள்ளம்பட்டியைச் சேர்ந்த 24 வயது கார்த்திகாவின் அப்பாவும் அம்மாவும் கூலித் தொழிலாளர்கள்! உடன் பிறந்தவர்கள் ஒரு அக்காவும், அண்ணனும்! டி.பார்ம்., படித்திருக்கிறார். தன் நேசத்திற்குரிய விளையாட்டே தன் குடும்பத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் எனும் பெரும் நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

உங்க குணம் உங்களைத் தாண்டி மத்தவங்களுக்கு என்ன தந்திருக்கு?

படிப்பை பாதியில நிறுத்தி அக்காவுக்கு கல்யாணம் நடந்தது; இப்போ, 'உன்னை மாதிரி எனக்கும் சாமர்த்தியம் இருந்திருந்தா நானும் முன்னேறி இருப்பேன்'னு அவ சொல்றா! குடும்ப சூழலால 10ம் வகுப்பை பூர்த்தி பண்ணாம வேலைக்கு போன அண்ணன், 'உன் வழிதான் சரி கார்த்திகா'ன்னு சொல்றான்.

ரெண்டு பேரும் வருத்தப்படுறது ஒருபக்கம் சங்கடமா இருந்தாலும், இன்னொரு பக்கம் பெருமையா இருக்கு! ஏன்னா, அவங்களோட இந்த எண்ணம் அவங்க குழந்தைகள் வாழ்க்கையில கண்டிப்பா மாற்றத்தை உண்டாக்கும்னு நான் நம்புறேன்!

கடந்த 2019ம் ஆண்டு முதல் இந்திய கால்பந்து அணியில் 'மிட் பீல்டர்' ஆக விளையாடி வரும் கார்த்திகா, 'கோல் அசிஸ்ட்' பொறுப்பில் சிறப்பாக செயலாற்றி வருகிறார். ஒடிசா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

பெண்ணாக பெருமிதம்... எதற்காக?

ஒரு ஆணுடைய வெற்றியை சாதாரணமா கைதட்டி கடந்து போற இந்த சமூகம், ஒரு பெண்ணுடைய வெற்றியை அண்ணாந்து ஆச்சரியத்தோட பார்க்குதே... என் பெண்மைக்கு இதைவிட வேறென்ன திருப்தி வேணும்!

கார்த்திகாவின் இப்போதைய வாழ்க்கை?

பசியோட யாரும் இப்போ என் வீட்டுல இல்லை! 'வெளியுலக அனுபவம் இருக்குறவ; அவகிட்டேயும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாமே'ன்னு வீட்டுல எந்த முடிவுகள் எடுக்குறதுக்கு முன்னாடியும் என் கருத்தையும் கேட்டுக்கிறாங்க; சமூகத்துல மரியாதை கூடியிருக்கு.

கார்த்திகாவின்புதுப்புது அர்த்தங்கள்*புகழ்? - கண்ணாடி*குடும்பம்? - வெளிச்சம்*நம்பிக்கை? - சொத்து

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us