
சிரட்டையில் கை வினைப் பொருட் கள்; பீடி சுற்றும் பெண்களை கை வினை கலைஞர்க ளாக்கி அவர்களின் தயாரிப்புகளை கண்காட்சிகள் வழியே சந்தைப்படுத் துகிறார் கிரிஜா ஆனந்தபெருமாள். திருநெல்வேலி கொண்டாநகரத்தில் இருக்கிறது இவரது பொருநை இகோ கிராப்டர்ஸ்.
சிரட்டையில் எப்படி இதெல்லாம்?
உடன்குடி, கொட்டாரத்தோட உறுதியான தேங்காய் ஓடுகள்தான் எங்க மூலப்பொருள். சிரட்டையில முக சிற்பம் எங்க தனித்துவ அடையாளம். நகை செய்ற உளியால எந்த முகத்தையும் துல்லியமா செதுக்கிடுவோம். புத்தர், நடராஜர் முக சிற்பங்களை நிறைய பேர் விரும்புறாங்க. சிரட்டை, பனை ஓலையோடு கூடிய கியூ.ஆர்.ஸ்கேனர் பலகைக்கு நல்ல வரவேற்பு. பனை மரத்துண்டு கடிகாரத்துல இளநீர் ஓடு எண்கள், சிரட்டை கரண்டி/ பூந்தொட்டி/ அணிகலன்கள்னு வழக்கமான தயாரிப்புகளும் எங்ககிட்டே உண்டு.
சிரட்டையில நாங்க செதுக்கின கேரள முதல்வரோட உருவம், ஆலப்புழா தென்னை நார் அருங்காட்சியகத்தை அலங்கரிக்கிற வாய்ப்பை எங்களுக்கு தந்தது.
எங்ககிட்டே பயிற்சி எடுத்த பலர் தொழில்முனைவோரா இருக்குறாங்க! எங்க தயாரிப்புகள் நிறைந்த நெல்லை பாரம்பரிய கைவினை கிராமம் உருவாக்கணும்ங்கிறது கனவு.
63740 85001
சிறப்பு பொருள்: சிரட்டை எண்களுடன் பனை ஓலை முறத்தினால் ஆன கடிகாரம் - ரூ.950 முதல்