PUBLISHED ON : செப் 15, 2024

செப்டம்பர் 01: நீலகிரி கிராமத்தில் நின்றிருந்த அரசுப் பேருந்தை மது போதையில் கடத்திச் சென்ற இளைஞருக்கு, 'விற்பனை சரிந்ததால் டாஸ்மாக் ஊழியர்கள் பணியிடை நீக்கம் என்ற செய்தி துணிச்சல் தந்திருக்குமா' என்று யோசிக்கிறேன்!
செப்டம்பர் 06' 'தமிழகத்தில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைக்கின்றன' என்று உயர் நீதிமன்றம் சொன்னதை விட, 'தமிழகத்திற்கான பெருமையில் காவல் துறைக்கு பெரும் பங்கு இருக்கிறது' என்று முதல்வர் அன்று சொன்னதில் எனக்கு ஈர்ப்பு!
செப்டம்பர் 08:'எங்கள் அரசுப்பள்ளி மாணவர்களிடம் கேள்வி கேளுங்கள்' என்று நம் முதல்வரிடம் கம்பீரம் காட்டிய டில்லி முதல்வர் போல், 'அரசுப்பள்ளிகளின் கல்வித்தரம் மோசம்' எனப்பேசும் நம் கவர்னரிடம் நம் முதல்வர் கம்பீரம் காட்டுவார்!
செப்டம்பர் 09: முதல்வரின் அமெரிக்க பயணத்தின் போது, 'முதலீட்டை குவிக்கும் சகோதரரே...' என வாழ்த்தாமல், 'தங்களது அமெரிக்க சைக்கிள் பயணம் போல் சென்னையில் நம் பயணம் எப்போது?' என ராகுல்காந்தி பதிவிட்டது புதிர்!
செப்டம்பர் 12: 'நம் பார்லிமென்ட் தாக்குதல் குற்றவாளி அப்சல்குருவை துாக்கில் போட்டிருக்க கூடாது' என ஜம்மு - காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கூட்டாளியான தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா பேசியதை மறந்து விட்டேன்!