
கலாரசிகையே...
தஞ்சாவூர் ஓவியங்களாலும், தத்ரூபமான 'கேன்வாஸ்' ஓவியங்களாலும் நிறைந்து ததும்புகிறது சென்னை பள்ளிக்கரணையின் விஷ்ணு ஆர்ட்ஸ் அண்டு கிராப்ட்ஸ்!
குறைந்தபட்சம் 6X8 அங்குல அளவிலிருந்து தஞ்சாவூர் ஓவியங்கள் இங்கிருக்கின்றன. ஓவியத்தில் 24 காரட் தங்கமுலாம் மின்னுகிறது. 'செமி எம்போஸிங்' முறையிலான தஞ்சாவூர் ஓவியங்களோடு '3டி' ஓவியங்களும் இங்குண்டு!
தங்க முலாமோடு குந்தன் கற்களும் அமெரிக்க வைர கற்களும் பதித்த ஓவியங்களை, அளவிற்கு தகுந்தாற்போல குறைந்தபட்சம் 20 நாட்களில் தந்து விடுகின்றனர். ரூ. 2,000 முதல் இங்கு தஞ்சாவூர் ஓவியங்கள் கிடைக்கின்றன! ஓவியங்கள் உள்ளடங்கும் கலைநயமிக்க மணிச்சட்டம், செட்டிநாடு சட்டம் உள்ளிட்டவையும் வெகுவாய் ஈர்க்கின்றன!
இங்குள்ள கேன்வாஸ் ஓவியங்கள் உண்மைக்கு அத்தனை நெருக்கமாய் இருக்கின்றன; புத்தக அலமாரி, கோப்பைகளும் பதக்கங்களும் நிறைந்த அலமாரி, மர ஜன்னலை பிரதிபலிக்கும் ஓவியங்களில், நிஜம் ஆச்சரியம் கொள்ளும் தத்ரூபம்! நம் முன்னோர்களின் புகைப்படங்களும் துல்லிய ஓவியமாய் இங்கே மாற்றித் தரப்படுகிறது.
ஒரு நல்ல கலை படைப்பு வெட்கம் கொள்ளும் அளவிற்கு அதை ரசிக்கும் உனக்கு, மிகச்சிறந்த ஓவியங்கள் குவிந்திருக்கும் ஒரு முகவரியை அறிமுகப்படுத்தியதில் எனக்கு மகிழ்ச்சி!
காதலுடன்... கண்ணம்மா.
94444 25337