sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

கண்ணம்மா

/

வானமே எல்லை

/

விடியும் வரை கிறுக்குவேன்

/

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்

விடியும் வரை கிறுக்குவேன்


PUBLISHED ON : செப் 22, 2024

Google News

PUBLISHED ON : செப் 22, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்டம்பர் 15: 'பேனா நினைவுச்சின்னத்திற்கு திட்டமிடும் தமிழக அரசிடமே அத்திட்ட பாதிப்புகள் பற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் ஆய்வறிக்கை கேட்டிருப்பதால், 'தி.மு.க., - பா.ஜ., இடையே உறவில்லை' என்று உளமார நான் நம்புகிறேன்!

செப்டம்பர் 16: காவிரி வீணாக கடல் சேர்கையில், பம்பிங் மூலம் 40 ஆயிரம் ஏரி, குளங்களில் கோதாவரியை நிரப்பி 130 டி.எம்.சி., நீரை தெலுங்கானா சேமிக்கிறது எனினும், 'நம்பர் ஒன் மாநிலம்' தமிழகமே; 'நம்பர் ஒன் முதல்வர்' என் முதல்வரே!

செப்டம்பர் 17:'அபராதம் விதித்த போக்குவரத்து காவலரிடம் 'தரமான சாலை எங்கே?' என்றதற்கு, 'அரசிடம் கேளுங்கள்' என்றார்; இது சரி. 'ஜி.எஸ்.டி., வருவாய் குறைவெனில் நிதி கமிஷனை கேளுங்கள்' என்று மத்திய நிதியமைச்சர் சொல்வது தவறு!

செப்டம்பர் 18: 'குடிகாரர்கள் உருவாவது எப்படி?' - இது, 'மனிதர்களுக்கு மட்டுமே சிந்திக்கும் திறன் உள்ளது; இச்சிந்தனையை துாண்டும் ஆற்றல் ஆசிரியர்களுக்கு மட்டுமே உள்ளது' என்று சொல்லும் அமைச்சர் உதயநிதிக்கான கேள்வி அல்ல!

செப்டம்பர் 19: 'உடன்பிறப்பு எனும் பாச உணர்வுடன் உலகத்தில் இயங்கும் ஒரே இயக்கம் நம்முடையது' என்று தி.மு.க., பவள விழாவில் முதல்வர் பேசியபோது, 'தலைவர்' பதவியோ, கனிமொழி கருணாநிதியின் முகமோ என் நினைவிற்கு வரவில்லை!






      Dinamalar
      Follow us