தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/தினசரி உணவில் 10 கிராம் நெய்!

தினசரி உணவில் 10 கிராம் நெய்!

தினசரி உணவில் 10 கிராம் நெய்!


PUBLISHED ON : நவ 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சாப்பிடும் உணவில், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள், புரதம் என்று அனைத்து சத்துக்களும் இருக்க வேண்டும். கார்போஹைட்-முழு தானியங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்கள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. இவையும், உள்ளூரில் விளைவித்ததாக இருப்பது நல்லது.

புரதம் - ஒருவரின் உடல் எடையில் 1 கிலோவிற்கு 1 கிராம் என்ற அளவில் புரதம் சாப்பிட வேண்டும. 50 கிலோ உடல் எடை இருப்பவர், 50 கிராம் புரதம் தினமும் சாப்பிட வேண்டும். இதில், 50 சதவீதம் பால், பால் பொருட்கள், வறுத்த வேர்க்கடலை, பாதாம், பிஸ்தா போன்ற உலர் 'நட்ஸ்', இறைச்சி, மீன், போன்றவற்றில் இருந்து கிடைக்கும் முதல் நிலை புரதமாக இருக்க வேண்டும்.

மீதி 50 சதவீதம், இரண்டாம் நிலை புரதமான பருப்பு வகைகளை சாப்பிடலாம். எந்த உடல் பிரச்னையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்கள், தினமும் 100 கிராம் நட்ஸ் சாப்பிடலாம். சாப்பிடும் உணவில் இருந்து கிடைக்கும் கலோரியில், 20 சதவீதம் கொழுப்பில் இருந்து கிடைக்க வேண்டும். கொழுப்பு நம் உடலுக்கு தேவை.

சமையல் எண்ணெய், நெய் இவற்றில் இருந்தே, தேவையான கொழுப்பு கிடைத்து விடும். சைவ உணவு சாப்பிடுபவர்கள், 5 - 10 கிராம் நெய் தினமும் சாப்பிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us