PUBLISHED ON : நவ 28, 2021

அ நிறம் | அளவு
வானவில்லின் ஏழு நிறங்களிலும் இருக்கும் காய்கறி, பழங்கள் நிறைந்ததாக சாப்பிடும் தட்டு இருப்பது அவசியம். பச்சை காய்கறிகள், மஞ்சள் நிற பழங்கள், சிவப்பு நிற பழங்கள் என, தினமும் 500 கிராம் அளவிற்கு, அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களை சாப்பிட வேண்டும்; நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.
'மெட்டபாலிசம்' எனப்படும் உடலின் உள்செயல்பாடுகள் திறம்பட நடக்க வைட்டமின்கள், தாதுக்கள் மிகவும் அவசியம். இதனாலேயே, இவற்றை சுமை தாங்கிகள் என்று சொல்கிறோம்.
இந்த சத்துக்கள் தேவையான அளவு இல்லாவிட்டால், நாம் சாப்பிடும் மற்ற சத்துக்கள் முழுதும் உடம்பில் சேராது.
-நேச்சர் ஜெனிடிக்ஸ் ஜர்னல்
