தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/வலிப்பு நோய்க்கு இதோ இருக்கிறது நிரந்தர தீர்வு!

வலிப்பு நோய்க்கு இதோ இருக்கிறது நிரந்தர தீர்வு!

வலிப்பு நோய்க்கு இதோ இருக்கிறது நிரந்தர தீர்வு!


PUBLISHED ON : நவ 28, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 28, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



''மருந்தால் குணப்படுத்த முடியாத வலிப்பு நோயாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம் நிரந்தர தீர்வு காணலாம்,'' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை (கே.எம்.சி.எச்.,) நரம்பியல் நோய் மற்றும் வலிப்பு நோய் சிகிச்சை நிபுணர் ராஜேஷ் சங்கர் ஐயர்.

மேலும் அவர் கூறியதாவது:இருதய நோயாளிகளைப்போல், ஆஞ்சியோகிராம் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு கண்டறியப்படும். இந்த அடைப்பு, மருந்து அல்லது பை-பாஸ், ஸ்டென்ட் அறுவை சிகிச்சைகள் மூலம் நீக்கப்படும்.அதேபோல், வலிப்பு நோய்க்கும் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.வலிப்பு நோயாளிகள், 5 - 10 சதவீதம் பேருக்கு, வீடியோ இ.இ.ஜி., மூலம் மூளை நரம்பில், ஏற்படும் அலை கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.நியூரோ நேவிகேஷன் என்ற இயந்திரம் மூலம், மூளையின் குறிப்பிட்ட பகுதியை, துல்லியமாக கண்டறிந்து அதை அகற்றி, மூளையில் பிற பகுதிகள் சேதமடையாமல் காக்கலாம்.சில நோயாளிகளுக்கு, எலக்ட்ரோ கார்டிகோ கிராபி என்ற நவீன முறை மூலம், வலிப்புக்கான அலை எங்கிருந்து வருகிறது, என்பதை கண்டறிந்து, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.வலிப்பு நோய்க்கு அறுவை சிகிச்சை பாதுகாப்பான ஒன்று.

நோயாளியும் விரைவில் குணமடைவார்; ஓரிரு வாரங்களுக்குள் இயல்பு நிலைக்கு திரும்பலாம். அன்றாட பணிகளை மேற்கொள்ளலாம்.அறுவை சிகிச்சைக்குப்பின், மருந்துகள் எடுத்துக் கொள்வது அவசியம். இது வாழ்க்கையின் தரத்தை மேம்படுத்தும். கே.எம்.சி.எச்.,ல், 100க்கும் மேற்பட்ட வலிப்பு நோய் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, கொரோனா காலத்தில் கடந்த மூன்று மாதங்களில், 14 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல்போன் எண்ணில், தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us