PUBLISHED ON : அக் 08, 2023

ஆட்டிசம் எனப்படும் மதியிறுக்க நோய் குறித்து சமீப ஆண்டுகளில் அதிகம் பேசப்படுகிறது. நரம்பியல் பாதிப்பால் மூளையின் செயல்பாடு குறைந்து குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
மரபியல் காரணங்கள், கர்ப்ப காலத்தில் சாப்பிடும் சில மருந்துகள், சுற்றுச் சூழலில் உள்ள வேதிப் பொருட்களின் பாதிப்பு, மனஅழுத்தம் போன்றவற்றாலும் ஆட்டிசம் பாதிப்பு வரலாம்.
கண்களை நேராகப் பார்த்து பேசுவதைத் தவிர்ப்பது, மொழியை கற்பதில் சிரமம், ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வது, காரணம் இல்லாமல் அழுவது, சிரிப்பது, குறிப்பிட்ட வார்தையை மீண்டும் மீண்டும் கூறுவது, கூச்சல் போடுவது உட்பட பல நடத்தை மாறுபாடுகள் இதன் அறிகுறிகளாக இருக்கும். பரிசோதனை செய்து, ஆட்டிசம் பாதிப்பு இருப்பதை உறுதி செய்ய முடியாது. குழந்தையின் வளர்ச்சி, நடத்தையில் தெரியும் மாறுபாடுகளை வைத்து மட்டுமே உறுதி செய்யலாம்.
ஹோமியோபதி மருத்துவத்தில் 20 வகையான மருந்துகள் உள்ளன. குழந்தைகளின் செயல்பாடுகள் அடிப்படையில், குறைபாடுகளின் அளவு, சமூகத் திறன், தகவல் தொடர்பு, பேசும் திறன், உணர்ச்சி வசப்படுதல் ஆகியவை குறித்தும் ஆய்வு செய்து, பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப மருந்துகள் தரப்படும். பக்க விளைவுகளோ, நச்சுத் தன்மையோ கிடையாது.
தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேல் மருந்துகள் சாப்பிடுவதால் நல்ல பலன் கிடைப்பதை பார்க்கிறோம். கோளாறின் தீவிரத்தைப் பொருத்து ஓராண்டு வரையும் மருந்துகள் சாப்பிடலாம். ஆயுர்வேதம், சித்தா போன்ற இந்திய பாரம்பரிய மருந்துகளுடன் சேர்த்தும் ஹோமியோபதி மருந்துகள் சாப்பிடலாம்.
டாக்டர் விஜய் ஆனந்த்,
ஹோமியோபதி மருத்துவர்,
சென்னை
94441 08041
