எலும்பு மூட்டு கோளாறுக்கு தீர்வு தரும் 'நேனோஸ்கோபி'
எலும்பு மூட்டு கோளாறுக்கு தீர்வு தரும் 'நேனோஸ்கோபி'
PUBLISHED ON : ஜூலை 28, 2024

'ஆர்த்தோஸ்கோபி' எனப்படும் நுண்துளை அறுவை சிகிச்சை பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இதனுடைய சமீபத்திய நவீன மாறுபட்ட தொழில்நுட்பம் 'நேனோஸ்கோபி' என்பதாகும்.
நம் நாட்டில் முதன் முறையாக எங்கள் மையத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நோயாளி முழு சுய நினைவுடன் இருக்கும் போதே அறுவை சிகிச்சை செய்துள்ளோம்.
ஆர்த்தோஸ்கோபியில் பென்சில் போன்ற நீளமான கருவியின் முனையில் கேமராவைப் பொருத்தி, எந்த மூட்டில் பிரச்னை உள்ளதோ, அங்கு நுண் துளை போட்டு அதன் வழியாக கேமராவை செலுத்தி, என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து சிகிச்சை தருவோம். நேனோஸ்கோபி என்பது பென்சில் முனையை விடவும் சிறிய கருவி. இதனால் என்ன நன்மை என்றால், ஆர்த்தோஸ்கோபி செலுத்த 4.4 மி.மீ., போடும் துளை, நேனோஸ்கோபியில் 1.9 மி.மீ., போட்டால் போதுமானது.
ஆர்த்தோஸ்கோபி முறையில் சிகிச்சை அளிக்கும் போது, மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்க வேண்டியிருக்கும். மயக்க மருந்து கொடுக்க வேண்டும். ஆனால், நேனோஸ்கோபியில் வெளி நோயாளியாகவே வந்து சிகிச்சை பெற்று அன்றே வீட்டிற்கு செல்லலாம். காரணம், துளை மிகச் சிறியது என்பதால், ஊசி குத்தினால் எந்த அளவு காயம் ஏற்படுமோ, அதே அளவு தான் இதில் இருக்கும்.
இதைக் காட்டிலும் நவீன முறையான நேனோ நீடில்ஸ்கோபி உள்ளது. இதுவும் நம் நாட்டில் முதன் முறையாக சென்னையில் அறிமுகம் ஆகியுள்ளது. முழங்கால், தோள்பட்டை மூட்டு பிரச்னைகளுக்கு இது எளிதான தீர்வாக அமைந்துள்ளது.
டாக்டர் கோபிநாத் துரைசாமி,எலும்பு, மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர்,பீ வெல் மருத்துவமனை, சென்னை96983 00300