sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

நீரிழிவு நோயாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

/

நீரிழிவு நோயாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

நீரிழிவு நோயாளிகளுக்கோர் வரப்பிரசாதம்

நீரிழிவு நோயாளிகளுக்கோர் வரப்பிரசாதம்


PUBLISHED ON : செப் 07, 2014

Google News

PUBLISHED ON : செப் 07, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீரிழிவு நோயின் தலைநகரமான, இந்தியாவில் தற்போது, 6.24 கோடி நீரிழிவு நோயாளிகளும், 7.72 கோடி பேர், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையிலும் உள்ளனர். இத்தகைய நிலைக்கு காரணம், துரிதமான பொருளாதார மற்றும் உணவு முறை மாற்றமே காரணம்.

இன்றைய நகரமயமாக்கலின் தாக்கத்தால் ஏற்பட்ட உணவு முறை மாற்றத்தில் சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள், கொழுப்பு மற்றும் விலங்குகளிலிருந்து பெறப்படும் உணவு வகைகளால், இந்த சத்துணவு மாற்றம் பெருமளவு நிகழ்கிறது. இந்த உணவு முறை மாற்றம் நீடித்த அல்லது நாட்பட்ட நோய்கள் தோன்றுவதற்கு முக்கிய பங்காற்றுகிறது.

மனிதனுக்குத் தேவையான சத்துகளை வழங்குவதில், தானிய வகைகள் பெரும் பங்காற்றுகின்றன. நம்மில் பெரும்பாலானவர்களுக்கு அரிசி உணவே வாழ்வாதாரமாக உள்ளது. இத்தகைய அரிசியே மனிதனுக்குத் தோன்றும் நோய்களின் ஆதாரமாக விளங்குகிறது.

அதனால், 'சென்னை மோகன்ஸ் டயபடிக் சென்டர்' அதிக நார்ச்சத்து உடைய வெள்ளை அரிசி வகையைக் கண்டறிந்துள்ளது. விவசாய விஞ்ஞானிகளுடன் இணைந்து, இந்த அரிய வகை அரிசியை உற்பத்தி செய்து வருகிறது, இந்நிறுவனம்.

இதுகுறித்து, டாக்டர் மோகன்ஸ் டயபடிக் சென்டர் தலைவர், டாக்டர் மோகன் கூறியதாவது:

துரிதமான தொழில் மயமாக்கத்தின் அலையால், புதுமை, நவீனம் என்ற பெயரில் உணவு முறைகளும் மாற்றம் கண்டு விட்டன. அரிசி அரவையின் போதான பதப்படுத்துதல், பாலிஷ் எனப்படும் பட்டை தீட்டப்படுதல் போன்ற பல பரிமாணங்களால் அரிசியின் சத்துக்கள் அழிக்கப்படுகின்றன.

தற்போது கிடைக்கும் பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில், ஒரு மனிதனுக்குத் தேவைப்படும், மூன்றில் இரண்டு பங்கு கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச்சத்தும், 60, - 70 கலோரிகளும் கிடைத்து விடுகிறது.

இந்த பாலிஷ் செய்யப்பட்ட அரிசியில், நார்ச்சத்து மற்றும் உடலுக்கு நன்மை பயக்கக்கூடிய சத்துக்கள் பெருமளவில் அழிந்து விடுகின்றன. உண்டவுடன் ஜீரணமாகி விடும் இந்த அரிசியால், உடலில் ரத்தத்தின் சர்க்கரை அளவு விரைவில் கூடிவிடுகிறது.

எங்கள் நிறுவனம் நடத்திய ஆய்வில், இத்தகைய வெள்ளை அரிசியால் தான், நம்நாட்டில், 'டைப் 2' எனப்படும், இரண்டாம் வகை நீரிழிவு நோய் பெருகி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இத்தகைய சுத்திகரிக்கப்படும், பாலிஷ் செய்யப்படும் தானிய வகைகளால், இன்சுலின் (கணையத்தில் சுரக்கும் ஒரு வகை ஹார்மோன்) சுரப்பு மற்றும் பரிணாம வளர்ச்சியின் தாக்கம் தென்னிந்திய மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக அதிகமான நீரிழிவு நோயாளிகளுடன், உலக அளவில் இந்திய இரண்டாம் இடம் வகிக்கிறது. அதற்கு முதன்மை காரணம், பாலிஷ் செய்யப்படுவதால் நார்ச்சத்து குறைந்த தானிய வகைகளை எடுத்துக் கொள்வதே. அதனால், உணவு முறையில், மிக விரைவிலேயே மாற்றம் ஏற்படுத்த வேண்டியது அவசியம்.

நீரிழிவுடன் தொடர்புடைய அதன் பாதிப்புகளை தடுப்பதற்காக, சத்து மிகுந்த தானிய வகைகளை உற்பத்தி செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

இதனால், விவசாய விஞ்ஞானிகளுடன் சென்னை டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மோகன்ஸ் ஹெல்த் கேர் புராடக்ட்ஸ் இணைந்து 'டாக்டர் மோகன்ஸ் ஹை பைபர் ரைஸ்' (நார்ச்சத்து மிகுந்த அரிசி) உற்பத்தி செய்துள்ளது. பொன்னி அரிசியின் வகையைச் சார்ந்த இந்த அரிசி, பாலிஷ் செய்யப்பட்டாலும் அதன் தன்மையை இழக்காது. ஆராய்ச்சியில் பல வித ரசாயன மாற்றங்கள் செய்யப்பட்டு, (Mutation Breading) பழங்கால முறைப்படி, கிட்டத்தட்ட, 1960ம் ஆண்டுகளில் உலகம் முழுவதும் கையாளப்பட்ட முறைப்படி விளைவிக்கப்படுகிறது.

*டாக்டர் மோகன்ஸ் ஹை பைபர் ரைஸ்' குணநலன்கள்...

இது, அரிசி வகையைச் சார்ந்தது. oryza sativa எனப்படும் இந்த அரிசியில் சாதாரண அரிசியை விட, ஐந்து மடங்கு நார்ச்சத்து அதிகம்.

  • மற்ற அரிசிகளுடன் ஒப்பிடுகையில், இதன் தோற்றம், சமைக்கும் முறை, சுவை போன்றவற்றில் எந்த வேறுபாடும் இல்லை. சாப்பாடு போன்றே இட்லி, தோசை, உப்புமா, பொங்கல் போன்ற சிற்றுண்டி வகைகள் செய்யவும், இந்த அரிசி ஏற்றது.
  • இயற்கை முறையிலான நார்சத்துக்களை கொண்டுள்ளதால், பக்க விளைவுகள் ஏதும் வராது.
  • 12 மாதங்கள் வரை இதை காற்றுப்புகாத, ஈரம்படாத டப்பாக்களில் இருப்பு வைத்து பயன்படுத்தலாம்.
  • மற்ற அரிசிகளைப் போல இதையும் கழுவி, சமைக்கலாம். அதனால், சத்துக்கள் அழிவதில்லை.
  • உணவு உண்ட பின், மற்ற சாதாரண அரிசிகளைப் போலில்லாமல், ரத்தத்தில் மிக மெதுவாகவே சர்க்கரை அளவை கூட்டுகிறது. இது, ஆரோக்கியமான செயலாகும். ஆனால், மிக நல்லது என்பதற்காக, இந்த அரிசியையும் தேவைக்கதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உணவு நிபுணர் அல்லது மருத்துவர் அறிவுரைப்படி எடுத்துக் கொள்வது நல்லது.
  • சாதாரண அரிசிக்கு மாற்றான இந்த அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமில்லாமல் மொத்த குடும்பத்துக்கும் ஏற்றது.
  • ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் குடும்பங்கள், அன்றாடம் இதைதங்கள் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
  • இந்த அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி, தற்போது பச்சை அரிசி வகையில் கிடைக்கிறது. விரைவில் புழுங்கல் அரிசி வடிவிலும் கிடைக்கச் செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன. இத்துடன் அதிக நார்ச்சத்து கொண்ட அரிசி ரவையும் கிடைக்கிறது.
  • தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, எங்களது நிறுவனங்கள் மற்றும் முன்னணி டிபார்ட்மென்டல் ஸ்டோர்களிலும் இந்த அரிசி கிடைக்கும்.
இவ்வாறு, டாக்டர் மோகன் கூறினார்.






      Dinamalar
      Follow us