பெண்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' வராமல் தடுக்கும் அரண்!
பெண்களுக்கு 'ஹார்ட் அட்டாக்' வராமல் தடுக்கும் அரண்!
PUBLISHED ON : ஏப் 09, 2023

கொழுப்பில், கெட்ட கொழுப்பு - எல்.டி.எல்., நல்ல கொழுப்பு - ஹெச்.டி.எல்., என்ற இரு வகைகள் உள்ளன. எல்.டி.எல்., 100 மி.கி., / டெ.லி.,க்குள் இருக்க வேண்டும். ஹெச்.டி.எல்., பெண்களுக்கு 50 - 60 மி.கி., / டெ.லி., ஆண்களுக்கு 40 மி.கி., / டெ.லி., இருக்க வேண்டும்.
பெண்களுக்கு எல்லாம், இயற்கை நல்ல கொழுப்பு ஆண்களை விட அதிகம் இருக்கலாம். எனவே, அவ்வளவு சீக்கிரம் பெண்களுக்கு மாரடைப்பு வராது.
வாழ்க்கை முறை மாறியதால், இதுவும் இப்போது மாறி வருகிறது. என் அனுபவத்தில் நல்ல கொழுப்பு 40 மி.கி., / டெ.லி.,க்கு மேல் இருக்கும் பெண்களை பார்த்ததில்லை. மிக அரிதாக 60 - 70 மி.கி., /டெ.லி., பார்த்திருக்கிறேன்.
நல்ல கொழுப்பை அதிகப்படுத்த இயற்கை கொடுத்த ஒரே வழி நடைபயிற்சி. ஓட்டமும், நடையுமாக வாரத்தில் ஐந்து நாட்கள் தினமும் 45 நிமிடங்கள் நடந்தால், ஆறு மாதங்களில் நல்ல கொழுப்பு 4 - 6 மி.,கிராம் அதிகமாகும். ஒரு ஆண்டு நடந்தால், 10 மி.கி., அதிகமாகும்.
கெட்ட கொழுப்பை குறைக்க, நுாற்றுக்கணக்கான மாத்திரைகள் வந்து விட்டன.
- டாக்டர் என்.தமிழ்செல்வம்,
சென்னை
