PUBLISHED ON : ஏப் 02, 2023

'சூப்பர் மார்க்கெட்'டில் அதிக அளவில் விற்பனையாவது, இதற்கு மேல் சுத்திகரிக்கவே முடியாது என்று சொல்லும் அளவுக்கு சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை, பாம் ஆயில் எனப்படும் பனங்கொட்டையில் எடுக்கப்பட்ட எண்ணெயில் செய்த விதவிதமான, 'குக்கீஸ், பிஸ்கட், கேக்' மற்றும் அதிகளவில் உப்பு, மசாலா சேர்த்து வறுத்த பருப்பு வகைகள். அதிலும் அனைத்து வகை சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி வகைகளில் விதவிதமா்ன குக்கீஸ் விற்பனைக்கு வந்து விட்டன.
யார் வேண்டுமானாலும் வாங்கி சாப்பிடும் அளவிற்கு மலிவான விலையில் இவை கிடைக்கின்றன.
தினசரி தவறாமல் குக்கீஸ் சாப்பிடும் இரண்டு லட்சம் பேரை சராசரியாக 58 வயதிற்குள், தேர்வு செய்து, 10 ஆண்டுகள் கண்காணித்ததில், 15 ஆயிரத்து 921 பேருக்கு 'கேன்சர்' பாதிப்பு வந்துள்ளதும், 4,009 பேர் கேன்சரால் இறந்ததும் தெரிந்தது.
குக்கீஸ், பிஸ்கட், கேக் சாப்பிடுவது, பலவிதமான கேன்சர் வரும் வாய்ப்பை குறிப்பாக மூளை, கருக்குழாய் கேன்சர் வரும் அபாயத்தை அதிகரிக்கிறது. குறிப்பாக மார்பக கேன்சரால் இறக்கும் வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக உள்ளது.
- 'கிளினிக்கல் மெடிசின்' மருத்துவ மின் இதழ்.
