PUBLISHED ON : ஆக 10, 2025

சளி, இருமல், மூக்கில் தொடர்ந்து நீர் ஒழுகுவது போன்ற தொந்தரவுகளால் அடிக்கடி பாதிக்கப்படுபவர்கள், வீட்டிலேயே கஷாயம் தயார் செய்து குடிக்கலாம்.
ஒரு டம்ளர் நீரில் கால் டீ ஸ்பூன் மஞ்சள் துாள், கால் டீ ஸ்பூன் மிளகு துாள், ஒரு ஏலக்காய், ஒரு லவங்கம் எடுத்து நன்றாக இடித்து, ஒரு டம்ளர் நீரில் போட்டு, ஒரு கைப்பிடி அளவு துளசி இலை, இல்லாவிட்டால் கற்பூரவல்லி இலை சேர்க்கலாம். இரண்டும் இருந்தால் ஒரு கைப்பிடி அளவு சேர்த்துக் கொள்ளலாம்.
இதை 3 நிமிடம் கொதிக்க வைத்து, வடிகட்டி, சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து, பெரியவர்கள் 40 மில்லி, குழந்தைகள் 20 மில்லி குடிக்கலாம்.
இதை தினசரி எடுத்துக் கொண்டால், தொற்று பாதிப்பு இல்லாமல், சளி தொந்தவு வராமல் தடுக்க முடியும்.
காரணம், சுவாச மண்டலத்தை பாதுகாப்பதில் இது மிகப் பெரிய பங்காற்றுகிறது. சளி, இருமல் இருக்கும் நாட்களில் இந்த கஷாயத்தை, உணவு சாப்பிட்ட பின் மூன்று வேளையும் ஐந்து நாட்கள் குடிக்கலாம். இதனால், உடலில் தங்கியுள்ள கபம், மலம் மற்றும் வியர்வை வழியாக வெளியேறி விடும்.
டாக்டர் யோ.தீபா, இயற்கை மற்றும் யோகா மருத்துவர், அரசு யோகா, இயற்கை மருத்துவமனை,சென்னை 044 - 2622 2682sakshaayaan@gmail.com

