
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சமையலில் நாம் பயன்படுத்தும், ஒரு துளிப் பெருங்காயம் பல மருத்துவ நன்மைகள் கொண்டது.
# எல்லா விதமான அஜீரணக் கோளாறுகளுக்கும் பெருங்காயம் பயன்படுகிறது.
# வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் இயற்கை குணம் உள்ள பெருங்காயம், வறட்டு இருமல், ஜலதோஷம், ஆஸ்துமா உட்பட, அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.
# மாதவிடயின் போது ஏற்படும் வலியைப் போக்கவும், சீரற்ற மாதவிடாய் பிரச்னைகள், அதிக உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பெருங்காயம் பயன்படுகிறது.
# தலையில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் விக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் தலைவலியைப் போக்கவும் உதவுகிறது.
டாக்டர் மீனாட்சி, டயட்டீஷியன், சென்னை