sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/நலம்/'பசுமையை அடிக்கடி பார்ப்பது கண்களுக்கு புத்துணர்வை தரும்'

'பசுமையை அடிக்கடி பார்ப்பது கண்களுக்கு புத்துணர்வை தரும்'

'பசுமையை அடிக்கடி பார்ப்பது கண்களுக்கு புத்துணர்வை தரும்'


PUBLISHED ON : நவ 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 06, 2019


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கண்களில் வறட்சி ஏற்பட காரணம் என்ன?

கண்களில் உள்ள நீர் சுரப்பிகள், போதுமான அளவு சுரக்காமல் போனால், கண்கள் வறட்சியாகி விடும். இதில் சிலருக்கு, கண்களில் தேவையான அளவு நீர் சுரக்காமல் இருக்கலாம்; சிலருக்கோ, உடனடியாக வறண்டு போகவும் செய்யலாம்.

கணினி, மடிக்கணினி, மொபைல் போன் போன்ற சாதனங்களை, பல மணி நேரம் தொடர்ந்து பயன்படுத்துவதே, கண்கள் வறண்டு போவதற்கான முக்கிய காரணம். இதற்கு, 'கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்' என்ற பெயர். இப்பிரச்னையுடன், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலர், மருத்துவரை அணுகுவது தற்போது அதிகரித்து உள்ளது.

இது தவிர, தைராய்டு உட்பட ஹார்மோன் பிரச்னை உள்ள பெண்கள் மற்றும் அதிகளவில் மாத்திரை உட்கொள்வோருக்கு, அதில் உள்ள வேதிப் பொருட்களால், கண்களில் வறட்சி ஏற்படுகிறது. மரபணு காரணங்களால் கண்களில் கோளாறு இருப்பவர்களுக்கு வறட்சி ஏற்பட்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

அறிகுறிகளை தெரிந்து கொள்வது எப்படி?

கண்கள், அயர்ச்சியாக இருக்கும். எரிச்சல் இருக்கும். கண்களை மூடித் திறந்தால், பாரமாக உணர முடியும். இது, மாலை வேளையில் அதிகமாக இருக்கலாம். அதோடு, அரிப்பு, சிவந்து போவது போன்ற பிரச்னைகள் அதிகமாக இருந்தால், உடனடியாக கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.

பரிசோதனை முறைகள் என்ன?

வறட்சியான கண்களுக்கென்றே, பிரத்யேக பரிசோதனை முறைகள் உள்ளன. கண்களில் உள்ள நீர் சுரப்பிகளில், மூன்று அடுக்குகள் உள்ளன. இதில், எந்த அடுக்கில் பிரச்னை இருக்கிறது என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப சிகிச்சை செய்யலாம். சொட்டு மருந்துகள் உள்ளன. டாக்டரின் ஆலோசனைபடி, பயன்படுத்த வேண்டும்.

கண்கள் வறட்சியை தடுக்கும் முறைகள்?

கிட்டப் பார்வை, துாரப் பார்வை போன்ற குறைபாடு உள்ளவர்கள், பார்வைத் திறனுக்கு பொருத்தமான கண்ணாடிகளை, அணிய வேண்டியது அவசியம். கணினி, மொபைல் போன், மடிக்கணினி போன்றவற்றை, 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தவிர்த்து, நிமிடத்திற்கு, 15 முறை கண்களை சிமிட்டுவதால், கண் சுரப்பியிலிருந்து, போதுமான நீர் சுரக்கும்.ரத்த நாளங்களில் இருந்து கிடைக்கும் ஊட்டச்சத்து தவிர, கண்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க, இதுவும் ஒரு வழி என்பதால், கண்களின் வறட்சியை தடுக்கும். பசுமையான இடங்களை அடிக்கடி பார்ப்பது, கண்களுக்கு புத்துணர்வை தரும். கைகள் இரண்டையும் தேய்த்து, உள்ளங்கைகளை கண்களின் மேல், 20 வினாடிகள் வைக்கலாம். இப்பயிற்சியை அவ்வப் போது செய்வது, கண்களின் ஓய்வுக்கு உதவும்.

உணவின் மூலம் சரி செய்ய முடியுமா?

'ஒமேகா - 3 பேட்டி அமிலம்' அதிகம் உள்ள உணவுகள், கண்களின் வறட்சியை போக்கவும், பொதுவான ஆரோக்கியத்திற்கும் உதவும். மீன் உட்பட அனைத்து கடல் உணவுகள், மீன் எண்ணெய், பிஸ்தா, பாதாம், ஆளி விதை, பூசணி, வெள்ளரி விதை உட்பட உலர் கொட்டைகள், விதைகள், முட்டை, தயிர், பழச்சாறு, சோயா பால், பச்சை காய்கறிகள், கீரை வகைகளில், ஒமேகா - 3 பேட்டி அமிலம் அதிகம் உள்ளது.

டாக்டர் கலா தேவி சதீஷ்

மண்டல தலைமை மருத்துவ அதிகாரி,

அகர்வால் கண் மருத்துவமனை,

சென்னை.

94443 66551

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us