PUBLISHED ON : அக் 07, 2014

சிறுநீரகங்களுக்கு, உடல் முழுவதும் ஓடும் மொத்த ரத்தத்தில் 25 சதவீதம் ஓடுகிறது.
உடல் முழுவதுக்கும் தேவைப்படும் ஆக்சிஜனில், 10 சதவீதம் சிறுநீரகத்துக்கு செல்கிறது.
ஒரு நிமிடத்துக்கு 2.4 லிட்டர் ரத்தத்தை வடிகட்டி, அதில் உள்ள கழிவுகளை நீக்குகின்றன. உடலுக்கு தேவையான நீர்சத்து, சமநிலையில் இருக்க உதவுகிறது.
ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, சிறுநீரகங்கள் உதவுகின்றன. அமில,-காரத் தன்மையைக் காக்க உணவுகின்றன. ரத்த சிவப்பணு உற்பத்திக்கு சிறுநீரகங்கள் உதவுகின்றன. சிவப்பணு உற்பத்திக்கு உதவும் எரித்தோபாய்ட்டின் (உணூதூtடணிணீடிஞுtடிண) என்ற ஹார்மோனை சிறுநீரகங்கள் சுரக்கின்றன. இந்த ஹார்மோன் சுரப்பியில் குறை ஏற்படும்போது, ரத்த சோகை ஏற்படுகிறது.
இவ்வாறு அத்தனை பணிகளையும், ஆயுள் முழுவதும் சிறுநீரகங்கள் செவ்வனே செய்கின்றன. அதில் ஏதாவது வேலை செய்யாமல், மக்கர் செய்ய ஆரம்பிக்கும் போது பிரச்னை ஆரம்பிக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு மனிதனும் இரண்டு சிறுநீரகங்களுடன் பிறக்கிறான். அதன் எடை 150 கிராம். 12 செ.மீ., நீளம் 5 செ.மீ .,அகலம் உடையது. சிறுநீரகத்தைப் பொருத்தவரை அதன் அளவு முக்கியம். நோய் காரணமாக இவை பாதிக்கப்படும் நிலையில், அதன் அளவு குறையவோ கூடவோ வாய்ப்பு உள்ளது.
சிறுநீரகங்களின் இயல்பான பணியை தீர்மானிப்பவை, அவற்றில் உள்ள ரத்த வடிகட்டிகள் ஒரு சிறுநீரகத்தில் 10 லட்சம் என இரண்டிலும் சேர்த்து மொத்தம் 20 லட்சம் வடிகட்டிகள் உள்ளன. இந்த வடிகட்டிகள் சல்லடை போன்றவை.
இவை, கழிவுகளை வடிகட்டி வெளியேற்றி, சுத்தமான ரத்தத்தை மட்டும் உடலுக்குள் மீண்டும் அனுப்புகின்றன. எஞ்சிய கழிவுகள் சிறுநீர் பையில் தேங்கி, அங்கிருந்து சிறுநீராக வெளிேயறுகிறது. இந்த வடிகட்டிகள் 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

