PUBLISHED ON : அக் 07, 2014

இரவில் ஊரை காக்கும் செக்யூரிட்டி கூட, கண்ணசந்தால் உறங்கி விடுவார். ஆனால் இந்த உலகில் 24 மணி நேரமும் டூட்டி பார்க்கும் ஒருவர் இருக்கிறார் என்றால், அது நம் இதயம்தான்!
ஒரு நாளைக்கு லட்சம் முறைக்கு மேல் துடிக்கிறது நம் இதயம். உடலில் இருக்கும் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள ரத்த நாளங்களுக்கு, 15,000 லிட்டர் ரத்தத்தைச் செலுத்துகிறது.
தாயின் கருவில் இருக்கும்போதே குழந்தையின் இதயத்தில் குறைபாடுகள் தோன்ற வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பிறவிக் குறைபாடுகள் மற்றும் வளர்ந்த பிறகு வருகின்ற நோய்கள் என இதய நோய்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
பிறவிக் குறைபாடுகள்: நெருங்கிய சொந்தங்களுக்கிடையே திருமணம், கர்ப்ப காலத்தில் ஏற்படும் நோய்கள், மருத்துவர் பரிந்துரைக்காமல் சாப்பிடும் மருந்துகள் போன்றவை பிறவியிலேயே இதயக் கோளாறுகள் ஏற்பட முக்கிய காரணங்கள்.
அழும்போது குழந்தையின் நிறம் நீலமாக மாறுதல், அடிக்கடி சளி பிடிப்பது, அடிக்கடி நோய்வாய்படுவதால், உடல் எடை அதிகரிக்காமல் இருத்தல் போன்றவை, பிறவி இதய நோய்களின் அறிகுறிகள்.
இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையே சுவரில் துளை, ஏட்ரியம் எனப்படும் இதய மேல் அறைகளுக்கு இடையில் உள்ள சுவரில் துளை ஏ.எஸ்.டி என்று அழைக்கப்படும். பிறந்தவுடன் குழந்தைக்கு இந்த துளை கண்டறியப்பட்டால் பெரும்பாலும் இது 40 வயதுக்கு மேல்தான் தொந்தரவு தரும். இதைக் குணப்படுத்த எளிய அறுவை சிகிச்சை போதும்.
இந்தத் துளையானது வலது, இடது வென்டரிக்கிள் எனப்படும் கீழ் அறைகளுக்கு இடையே காணப்பட்டால் வி.எஸ்.டி என்று அழைக்கப்படும். பெரும்பாலானவர்களுக்கு 12 வயதில் தானாகவே மூடிக்கொள்ளும்.
எப்படிப்பட்ட குறையாக இருப்பினும் கவலைப்படத்தேவை இல்லை. நவீன மருத்துவத்தின் மூலம் குறைகள் நீக்க முடியும்......

