தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: சளி இருப்பதே வியாதி இல்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: சளி இருப்பதே வியாதி இல்லை!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: சளி இருப்பதே வியாதி இல்லை!


PUBLISHED ON : ஜன 13, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 13, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குளிர் காலத்தில், குழந்தைகளுக்கு வரும் பொதுவான பிரச்னைகள், சுவாசக் கோளாறுகள், காதுகளில் ஏற்படும் தொற்று ஆகியவை தான்.

சளி, இருமல், மூக்கிலிருந்து நீர் வடிவது, தும்மல் போன்றவை, நிச்சயம் கவனிக்க வேண்டிய பிரச்னைகள். ஆனால், பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இந்தப் பிரச்னைகளுடன் சேர்ந்து, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால், தாமதிக்காமல் டாக்டரின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

தொண்டையின் மேல் பகுதி அல்லது சுவாசக் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மூச்சுத் திணறல் வரலாம். சுவாசக் குழாயின் கீழ் பகுதியில், அடைப்பு அல்லது சுருக்கம் இருந்தால், மூச்சிரைப்பு அல்லது ஆஸ்துமா வரலாம்.

குளிர் அல்லது வேறு ஏதேனும் வெளிக் காரணிகளால், அடைப்பு, சுருக்கம் துாண்டப்படும் போது, பிரச்னைகள் வரும். அறிகுறிகளுக்கு தகுந்தவாறு, சிகிச்சை தேவைப்படும்.

தொண்டையின் மேல் பகுதிக்கும், மூக்கிற்கும் இடையில் அடைப்பு ஏற்பட்டால், துாங்கும் நேரத்தில், குறட்டை சப்தம் வரும். குறட்டை இருந்தால், ஆழ்ந்த துாக்கத்தில், சுவாசிக்க முடியாமல், வாயால் சுவாசிக்க நேரிடும்.

நீண்ட நேரம் இப்படி சுவாசிப்பது சிரமம் என்பதால், ஆக்சிஜன் கிடைப்பது குறைந்து, விழித்துக் கொள்வர்.

சுவாசம் சீரானவுடன், மீண்டும் துாங்குவர். துாக்கம், விழிப்பு என்று மாறி மாறி வரும். எத்தனை முறை விழிப்பும், துாக்கமும் மாறி மாறி வருகிறதோ, அத்தனை முறை, ஆக்சிஜன் செல்வது தடைபடுகிறது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தைப் பருவத்தில், உடலுக்குத் தேவையான ஆக்சிஜன், சீராக கிடைக்க வேண்டும். அப்போது தான், உடல் வளர்ச்சி நன்றாக இருக்கும். ஆக்சிஜன் செல்வது குறைந்தால், உடல் வளர்ச்சியை பாதிக்கும். துாக்கத்தில் குழந்தை குறட்டை விட்டால், 'நல்லா குறட்டை விட்டு துாங்குறான்' என்று, சாதாரணமாக இந்தப் பிரச்னையை எடுத்துக் கொள்ளாமல், மூச்சு விட முடியாமல் குழந்தை சிரமப்படுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னொரு பிரச்னை, 'குழந்தைக்கு மார்புல, மூக்குல சளி இருக்கு; என்ன செய்தாலும் சரியாகவில்லை' என்பது. சளி இருப்பதே வியாதி இல்லை. சளி கொஞ்சம் உடம்பில் இருக்க வேண்டும். வெளியில் இருந்து உடலுக்குள் செல்லும் காற்று, வெப்பமாக இருந்தால், அதை குளிர்விப்பதற்காகவே சளி உள்ளது. அதனால் சளி இருப்பதே வியாதி என, நினைக்கக் கூடாது.

எப்போது சிகிச்சை தேவை?

தொடர்ந்து தும்மல், மூக்கிலிருந்து பச்சை அல்லது மஞ்சள் நிறத்தில் திரவம் வெளி வருவது, சுவாசிப்பதில் சிரமம்... இப்படி ஏதேனும் பிரச்னை இருந்தால், சிகிச்சை தேவை. குழந்தையின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை சரியாக கவனித்து, டாக்டரிடம் சொல்ல வேண்டும்.

குறட்டை வருவது ஏன்?

மூக்கிற்கும், தொண்டைக்கும் நடுவில் உள்ள அடினாய்டு சுரப்பியில், ஏற்படும் தொற்றினால், சுரப்பி வீங்கி விடும். இதனால், மூச்சுக் காற்று செல்வது தடைபட்டு, குறட்டை சப்தம் வருகிறது.

இதுபோன்று, தொற்று அல்லது ஒவ்வாமையால் பிரச்னை என்றால், அதற்கான மருந்துகள் கொடுத்து, சரி செய்து விடலாம்.

சில குழந்தைகளுக்கு அடிக்கடி தொற்று ஏற்பட்டு, வீக்கம் குறையாமல் நிரந்தரமாக இருக்கும். இந்த நிலைமையில், அறுவை சிகிச்சை செய்து, அகற்றி விடுவதே நல்லது. இதனால், எந்த பாதிப்பும் இருக்காது.

டாக்டர் எஸ். திருநாவுக்கரசு,

குழந்தைகள் நல காது, மூக்கு, தொண்டை நிபுணர், சென்னை. 98843 50280


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us