தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - சத்தம் இல்லாத செயலிழப்பு!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - சத்தம் இல்லாத செயலிழப்பு!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - சத்தம் இல்லாத செயலிழப்பு!


PUBLISHED ON : ஜூலை 07, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அளவிற்கு அதிகமாக மது அருந்தினால், 'லிவர் சிரோசிஸ்' எனப்படும், கல்லீரல் செயலிழப்பு ஏற்படும் என்பது பொதுவான நியதி. நம்முடைய உணவுப் பழக்கத்தில் எற்பட்டுள்ள மாற்றத்தினால், மது பழக்கம் இல்லாதவர்களுக்கும், 'பேட்டிலிவர்' கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது.

இந்த வீக்கம் நீண்ட நாட்கள் அப்படியே இருந்தால், செல்கள் மெதுவாக அழிந்து, தழும்புகள் உருவாகும். முடிவில், சிரோசிஸ் ஏற்படும். இது நாளடைவில், கேன்சராக மாறவும் வாய்ப்புகள் அதிகம்.

கல்லீரல் கோளாறுகள் ஏற்பட்டால், அறிகுறிகள் வெளியில் தெரியாது. கல்லீரல் தன் செயல்பாட்டை பெருமளவு இழந்த பின்பே, பாதிப்புகள் வெளியில் தெரிய வரும்.

இதற்கு, குறைந்தது, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் ஆகலாம். அந்த அளவிற்கு சத்தமே இல்லாமல், செயல்பாட்டை இழக்கும். கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வது மட்டுமே, தீர்வு என்ற நிலையிலேயே, சிரோசிஸ் பாதிப்பு கண்டுபிடிக்கப்படுகிறது.

கல்லீரலின் திசுக்கள் கெட்டு, தழும்புகள் ஏற்பட்டால், மீண்டும் பழைய நிலைக்கு வருவது சாத்தியமில்லை. கல்லீரலைப் பொருத்தவரை, வருமுன் காப்பதே சிறந்த வழி. அப்படி இல்லாவிட்டால், துவக்கத்திலேயே கண்டறிந்து, நிரந்தரக் கோளாறு ஏற்படாமல் இருக்க, சிகிச்சை செய்ய வேண்டும்.

முப்பது வயதிற்குட்பட்டவர்கள், 'சிரோசிஸ்' பிரச்னையால் பாதிக்கப்படுவது சர்வ சாதாரணமாகி விட்டது.

பள்ளியிலேயே அறிமுகமாகும் மதுப் பழக்கம், கல்லுாரி வரை தொடர்கிறது. மதுவுக்கு அடிமையாவதைத் தவிர, செயற்கை ஊட்டங்கள் சேர்க்கப்பட்ட, பதப்படுத்திய உணவுகள், உடற்பயிற்சியின்மை, மரபியல் ரீதியிலான கல்லீரல் கோளாறுகளும், அதிக அளவில் இளைஞர்களை பாதிக்கிறது.

இதனால், உடல் உள் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு, உள் உறுப்புகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றன.

வயிற்றுப் பகுதி முழுவதையும், சி.டி., ஸ்கேன் செய்பவர்களில், குறைந்தது, 30 சதவீதம் பேருக்கு, கொழுப்பினால் கல்லீரல் வீங்கும் பிரச்னை உள்ளது.

இந்தியாவில் உள்ள பல கல்லீரல் ஆய்வு மையங்களில், சுற்றுச் சூழல், மரபியல், வாழ்க்கை முறை போன்றவை கல்லீரல் வீக்க பாதிப்பை ஏற்படுத்துவது ஆய்வுகள் மூலம் உறுதி ஆகியுள்ளது.

இந்தப் பிரச்னைக்கு, தற்போது, எந்த சிகிச்சையும், மருந்துகளும் இல்லை. உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடற்பயிற்சி, உடல் எடையை சீராக வைத்திருப்பது, ஆகியவை மட்டுமே தீர்வு.

டாக்டர் ஹரிகுமார் ஆர்.நாயர்,

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மருத்துவர்,

குளோபல் ஹெல்த் சிட்டி, சென்னை.

95660 31449

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us