தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் உறுப்பு தானம் செய்யலாமா?

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் உறுப்பு தானம் செய்யலாமா?

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் உறுப்பு தானம் செய்யலாமா?


PUBLISHED ON : ஜூலை 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மீன் எண்ணெய் மாத்திரைகள் சாப்பிடுவதால் இருதயநோய் மற்றும் புற்றுநோய் வராது என்று கூறுகிறார்களே!

மீன் உணவை அதிகமாக உண்பவர்கள் நீண்ட நாள் உயிர் வாழ்வதால் இக்கேள்வி எழுகிறது. விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்கப்படாவிட்டாலும் மீன் எண்ணெய் மாத்திரைகளில் உள்ள ஒமேகா அமிலம் புற்றுநோய் மற்றும் இருதய நோய் வராமல் தடுக்க உதவுகிறது.

வீட்டிற்கு உபயோகப்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மற்றும் கொசு மருந்துகளினால் சுவாசக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உண்டா?

தரம் குறைவான பூச்சிக்கொல்லி மருந்துகளையோ கொசு மருந்துகளையோ பயன்படுத்தும்போது அவற்றை சுவாசிப்பவர்களுக்கு அலர்ஜி மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

நான் பருமனாக உள்ளேன். நுண்துளை இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் உடல் பருமன் குறையும் என்று கூறுகிறார்கள். இதனால் ஏதேனும் பின் விளைவு ஏற்படுமா?

உடல் பருமனுக்காக செய்யப்படும் 'பேரியாட்ரிக் சர்ஜரி' சமீப காலங்களில் தான் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் பல ஆண்டுகளுக்கு பின் ஏற்படும் பக்கவிளைவுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. இன்றைய காலக்கட்டத்தில் இந்த அறுவை சிகிச்சை மூலம் உடல்பருமன் மற்றும் சர்க்கரை நோயை குறைக்கலாம்.

நான் 'ஹெல்த் செக்கப்' செய்தபோது பித்தப்பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்காக நான் உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

பித்தப்பையில் இருக்கும் கற்களுக்கு உடனடியாக சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதனால் வலியோ, ஜீரண உறுப்பு உபாதைகளோ ஏற்பட்டால் லேப்ராஸ்கோபி மூலம் பித்தப்பையை அகற்றிக்கொள்வது நல்லது.

நான் 40 வயது பெண். ஸ்கேன் செய்தபோது எனது கர்ப்பப்பையில் பைப்ராய்டு கட்டிகள் உள்ளது தெரிந்தது. இதற்கு ஏதேனும் நவீன சிகிச்சை உண்டா?

முன்பெல்லாம் பைப்ராய்டு கட்டிக்கு கர்ப்பப்பையை எடுக்க வேண்டும். இப்போது பைப்ராய்டு கட்டிகளை மட்டும் அகற்றி கர்ப்பப்பையை எடுக்காமலேயே சிகிச்சை செய்யலாம். மேலும் மருந்துகள் மூலம் பைப்ராய்டு கட்டிகளின் வளர்ச்சியையும் குறைக்கலாம்.

நான் 30 வயது பெண். எனக்கு குழந்தை பிறந்து 5 ஆண்டுகளாகிவிட்டன. திடீரென்று சில மாதங்களாக எனது மார்பகங்களில் பால் போன்ற கசிவு உள்ளது. இதற்கு நான் என்ன செய்யலாம்?

இது உடம்பில் உள்ள சில நாளமில்லா சுரப்பிகளின் மாற்றத்தினால் ஏற்படுகிறது. இதை ஒரு ரத்தப்பரிசோதனை செய்து அதற்கு பின் மருந்து மாத்திரைகளினால் எளிதில் குணப்படுத்திவிடலாம்.

நான் சில ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தேன். எனது உறுப்புகளை பிறருக்கு தானம் செய்யலாமா?

புற்றுநோயில் இருந்து மீண்டவர்கள் தாராளமாக கண் தானம் செய்யலாம். ஆனால் பிற உறுப்புகளை தானம் செய்ய முடியாது.

- டாக்டர். மோகன்பிரசாத்

புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், மதுரை

98430 50822


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us