தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கட்டை விரலில் வலியா...!

கட்டை விரலில் வலியா...!

கட்டை விரலில் வலியா...!


PUBLISHED ON : ஜூலை 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

54 வயதான எனக்கு கட்டை விரலின் அடிப்பாகத்தில் வலி உண்டாகிறது. ஒரு ஜாடியின் மூடியை திறப்பது கூட கடினம். ஒரு தேநீர் கிண்ணத்தை கையில் ஏந்துவதும் கடினம். கட்டை விரலின் அடிப்பாகத்தில் சற்று வீக்கமும் ஏற்படுகிறது. இதற்கு என்ன செய்யலாம்?

நம் கையின் செயல்பாட்டில் கட்டை விரல் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. நீங்கள் சொல்லும் அறிகுறிகள் கட்டை விரலின் அடிப்பகுதியில் உள்ள 'சி.எம்.சி., ஜாய்ண்ட்' என்கிற சிறு மூட்டுகளில் ஏற்படும் பிரச்னையாகும். ஆரம்பத்தில் வலியும், வீக்கமும் ஏற்படும். மோசமடையும்போது கட்டை விரலின் முழுச்செயலை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. இதை மனதில் வைத்து நீங்கள் மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும். வலி உண்டாகும் இடத்தில் செய்கைகளை தவிர்ப்பது நல்லது. சி.எம்.சி., மூட்டினை பாதுகாப்பதற்கு ஒரு Splint அணியலாம். அதிலும் குணமாகாதவர்களுக்கு ஒரு சிறு அறுவை சிகிச்சை மூலம் சரி செய்ய முடியும்.

24 வயதான எனக்கு 2 வருடங்களுக்கு முன் நடந்த விபத்தில் தோள்மூட்டு விலகியது. பிறகு இரண்டு முறை மேலிருக்கும் பொருளை கையை உயர்த்தி எடுக்கும்போது தோள்மூட்டு விலகியது. கடந்த மூன்று மாதங்களாக உறங்கும்போது விலகுகிறது. நான் உறங்கும்போது எந்தவித காரணமுமின்றி ஏன் தோள்மூட்டு விலகுகிறது?

Osteoporosis என்னும் நோய், எலும்பின் அடர்த்தி குறைவதாகும். பொதுவாக வயதாகும்போது எல்லோருக்கும் எலும்பின் அடர்த்தி சிறிது சிறிதாக குறையும். தினமும் மிதமான உடற்பயிற்சி, சத்தான உணவு வகைகள், கீரை, நார்ச்சத்து உட்கொள்பவர்களுக்கு எலும்பின் அடர்த்தி வேகமாக குறையாது. Fosamax என்னும் மருந்து Bishophonates என்கிற குழுமத்தை சார்ந்தது. இந்த மருந்து எலும்பின் அடர்த்தி குறைவதை கட்டுப்படுத்த கொடுக்கப்படுவதாகும். இது வாழ்நாள் முழுவதும் எடுக்க வேண்டிய மருந்து. தினசரி எடுக்க இயலாதவர்களுக்கு வசதியாக மாதம் ஒரு முறை அல்லது வருடம் ஒருமுறை என்கிற மருந்துகளும் உண்டு. மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.

- டாக்டர். கே.என்.சுப்பிரமணியன்

எலும்பியல் நிபுணர், மதுரை

93442 46436


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us