தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அரிசியில் இருக்கும் அற்புதம்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அரிசியில் இருக்கும் அற்புதம்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - அரிசியில் இருக்கும் அற்புதம்!


PUBLISHED ON : ஜூலை 14, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கேன்சர், சர்க்கரைக் கோளாறு என்று எந்தப் பிரச்னையானாலும், முறையாக சிகிச்சை பெற்று, குணம் அடைந்து, மகிழ்ச்சியாக செல்லும் பலரும், அடுத்த ஓராண்டில், அதே பிரச்னைகளோடு திரும்பவும் வருகின்றனர். இது எனக்கு வருத்தமாக இருக்கிறது.

மருந்துகளுக்கு கட்டுப்படும் நோய், மீண்டும் வந்து விடுகிறது. உடல் கோளாறுகளுக்கான மூல காரணத்தைக் கண்டறிந்து, சரி செய்வது மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்று தோன்றியது. சரியான உணவுப் பழக்கத்தால் மட்டுமே, நோயின்றி வாழ முடியும் என்று ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது.

இயற்கை முறையில் பாரம்பரிய நெல் வகைகளைப் பயிர் செய்யும் விவசாயிகளை தொடர்ந்து சந்தித்ததில், அரிசி குறித்த அற்புதமான விஷயங்கள் கிடைத்துள்ளன. பாரம்பரிய அரிசி குறித்து, நம்மில் பலருக்கும் தெரியாது; தமிழகத்தில், அதிக அளவில் பயன்படுத்துவது, காவிரி டெல்டாவில் பயிராகும், மேம்படுத்தப்பட்ட, பொன்னி அரிசி. இதில் எந்த பலனும் இல்லை.

என்னிடம் ஆலோசனைக்கு வரும் நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவு, 300 எம்.ஜி., /டி.எல்., என்ற அளவிற்கு மேல் இருந்தால் மட்டுமே மருந்துகள் தருவேன். அதற்கு குறைவாக இருந்தால், குறிப்பிட்ட வகை பாராம்பரிய அரிசி, சமைக்காத காய்கறிகள், பழங்கள் என்று உணவுப் பழக்கத்தில் மாற்றம் செய்தே, சரி செய்து விட முடியும்.

பொன்னி அரிசியில், கார்போஹைட்ரேட், 92 யூனிட், கிளைசிமிக் இன்டெக்ஸ், 89 யூனிட்டுகளும் உள்ளன. தொடர்ந்து இதைச் சாப்பிட்டால், ரத்த சர்க்கரையின் அளவு இயல்பாகவே அதிகரிக்கும்.

பாரம்பரிய அரிசியில், கிளைசிமிக் இன்டெக்ஸ், 56 யூனிட் மட்டுமே உள்ளது. பாரம்பரிய அரிசியில், இயற்கையாக உள்ள சத்துகளும், குணங்களும் எத்தனை தலைமுறைகள்ஆனாலும் மாறாமல் இருக்கும்.

ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன், இரண்டு லட்சம், பாரம்பரிய அரிசி வகைகள் இங்கு விளைந்ததாக வரலாறு இருக்கிறது.

'ஏம் பார் சேவா' என்ற தன்னார்வ அமைப்பின் சார்பில், கும்பகோணம் அருகில் உள்ள மஞ்சக்குடியில், இயற்கை விவசாயிகளை இணைத்து, 40 ஏக்கரில், வால் சிவப்பு, கோவிந் போக், காலா ஜீரா, காட்டுயானம், மாப்பிள்ளை சம்பா, சிவப்பு மற்றும் கறுப்புக் கவுனி, துாய மல்லி உட்பட, 130 வகை பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்து, அதில் பலவற்றை விளைவிக்கின்றனர்.

டாக்டர் டி.அரவிந்த பரத்வாஜ், ஆயுர்வேத மருத்துவர்,

சென்னை.

93825 25255

பாரம்பரிய அரிசிக்கு 95000 82142

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us