குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - வெற்றி பெற்றவரையும் வீழ்த்திவிடும்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு! - வெற்றி பெற்றவரையும் வீழ்த்திவிடும்!
PUBLISHED ON : ஜூலை 14, 2019

உடல் பருமனால், உடல் பிரச்னைகள் மட்டுமல்ல, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனப் பிரச்னைகளும் வரலாம். குண்டாக இருந்தால், தன்னம்பிக்கை உணர்வே இல்லாமல், எதிர்மறை எண்ணங்கள் நிறைய தோன்றும்.
சினிமா, இசை, விளையாட்டு என்று பல துறைகளைச் சேர்ந்த, பிரபலங்கள் பலரும், உடல் பருமன் அதிகரித்ததன் காரணமாக, தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்த முடியாமல், முடங்கி உள்ளனர்.
இவர்களில், பலருக்கும், அறுவை சிகிச்சை செய்து எடையைக் குறைத்துள்ளோம். 20 கிலோ வரை எடை குறைந்ததும், முன்பிருந்ததைக் காட்டிலும், பல மடங்கு அதிக திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிரபல நடிகை ஒருவர், இளம் வயதில், முன்னணி நாயகியாக வெற்றி பெற்றவர். திருமணம் ஆன பின், உடல் பருமன் அதிகரித்து, சினிமாவை விட்டு விட்டார். அறுவை சிகிச்சை செய்து, உடல் எடையைக் குறைத்து, மீண்டும் நடிக்க வந்து, கேரக்டர்ரோல் செய்கிறார்.
டாக்டர் தீபக் சுப்ரமணியம்,
பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர்,
சென்னை.
044 - 4523 2323
