தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: மருத்துவ காப்பீட்டில் மறுசீரமைப்பு!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: மருத்துவ காப்பீட்டில் மறுசீரமைப்பு!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: மருத்துவ காப்பீட்டில் மறுசீரமைப்பு!


PUBLISHED ON : ஜூலை 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'பிளாஸ்டிக் சர்ஜரி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், மூக்கை நேராக்க, உதிர்ந்த முடியை ஒட்ட என, வெளித் தோற்றத்தை சரி செய்வதற்கான, அழகு அறுவை சிகிச்சை என்று தான் நினைக்கிறோம்.

வெளித் தோற்றத்தை சரி செய்வதற்கும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்கிறோம். ஊடகம், சினிமா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு தோற்றம் முக்கியம்.

அழகிற்காக செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரி, வெறும், 20 சதவீதம் மட்டுமே. 80 சதவீதத்திற்கும் அதிகமாக, மறுசீரமைப்பிற்கான அறுவை சிகிச்சை தான் செய்கிறோம்.

குறிப்பாக, பெண்களை அதிகமாக தாக்கும் மார்பக புற்றுநோய்க்கு, மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை அதிகம் பயன்படுகிறது. பெரும்பாலான பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு இல்லை.

மார்பகப் புற்றுநோய் காரணமாக, அதை நீக்க வேண்டிய அவசியம் ஏற்படும் போது, பெண்கள், சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும், பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது.

வெளிநாடுகளில், மார்பகத்தை நீக்க வேண்டி வந்தால், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்பது கட்டாயம்; ஆனால், நம் நாட்டில் அப்படி இல்லை.

ஆனாலும், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்வதற்கான தொழில்நுட்பம், 20 ஆண்டுகளாக உள்ளது என்பது பெரும்பாலானோருக்கு தெரியவில்லை.

நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, மார்பகத்தை நீக்க வேண்டி வந்தால், பெரும்பாலும் அவர்களின் அடிவயிறு தசைகளை எடுத்து, நீக்கப்பட்ட மார்பகத்தை மறு சீரமைப்பு செய்து விடுவோம்.

பால் சுரப்பு போன்ற இயற்கையான செயல்கள், மறு சீரமைப்பு செய்த மார்பகத்தில் சாத்தியமில்லை.

ஆனால், அதே பகுதியில் மீண்டும் கேன்சர் கட்டி வந்தால், வழக்கமான பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.

மறுசீரமைப்பு செய்யும் போது, சமூக ரீதியிலான பல பிரச்னைகளை தவிர்க்க முடியும். வெளித் தோற்றத்தில் ஏதாவது வேறுபாடு தெரியுமோ, ஒரு மாதிரி பார்ப்பரோ என்ற சங்கடம் இல்லாமல், இயல்பாக இருக்கலாம்.

தாடை பகுதியில் கேன்சர் வந்தாலோ, விபத்து காரணமாக எலும்புகளை இழக்க நேரிட்டாலோ, அதற்கும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை உதவுகிறது.

அழகுக்காக மட்டுமே செய்யப்படுவது பிளாஸ்டிக் சர்ஜரி என்ற தவறான எண்ணத்தில், இதன் பலன் பெரும்பாலானோ ருக்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

முதல்வரின் ஒருங்கிணைந்த மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில், பிளாஸ்டிக் சர்ஜரிக்கும் காப்பீடு உள்ளது. எனவே, கேன்சரில் உறுப்புகளை இழக்க நேரிட்டால், மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்து, தன்னம்பிக்கையுடன் வாழ்வை எதிர் கொள்ள வேண்டும்.

டாக்டர் செல்வ சீதாராமன்,

பிளாஸ்டிக் சர்ஜரி சிறப்பு மருத்துவர், சென்னை.

dr_seetha39@yahoo.com


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us