தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/வாராவாரம்/நலம்/குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: எடை கூட்டும் பாக்டீரியா!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: எடை கூட்டும் பாக்டீரியா!

குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: எடை கூட்டும் பாக்டீரியா!


PUBLISHED ON : ஜூலை 15, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'புரோபயாடிக்' எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள், போதுமான அளவு ஜீரண மண்டலத்தில் இருப்பது ஆரோக்கியம் என்பது தெரிந்த விஷயம். செரிமானத்திற்கும், சத்துக்கள் முழுமையாக உறிஞ்சப்படுவதற்கும் நல்ல பாக்டீரியாக்கள் தேவை.

புரோபயாடிக் நன்கு பெருக, நார்ச்சத்து நிறைந்த, 'பிரிபயாடிக்' உணவுகளை சாப்பிட வேண்டும். நல்ல பாக்டீரியாவின் உணவு, நார்ச்சத்து.

நார்ச்சத்தை, நம்முடைய செரிமான மண்டலத்தால் செரிக்க முடியாது.

நல்ல பாக்டீரியாக்கள், நார்ச்சத்தைச் சாப்பிடும் அல்லது குறுகிய காலம் பயன்தரக்கூடிய கொழுப்பு அமிலமாக மாற்றி விடும். இது, உடலின் உள் செயல்பாடுகளுக்கு, பல விதங்களில் பலன் தரக்கூடியது.

பால், தயிர், இட்லி மாவு போன்ற புளிக்க வைத்த உணவுகளில், நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன. பருப்பு வகைகள், பீன்ஸ், பட்டாணி, ஓட்ஸ், வாழைப்பழம், வெங்காயம், பூண்டு, உமி நீக்கப்படாத தானியம் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளன.

நாம் சாப்பிடும் உணவே, நல்ல, கெட்ட பாக்டீரியாக்கள் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கிறது. கொழுப்பு, சர்க்கரை அதிகம் உள்ள உணவை தொடர்ந்து சாப்பிடும் போது, அது கெட்ட பாக்டீரியா பெருக உதவி செய்கிறது; கெட்ட பாக்டீரியா இருந்தால், சாப்பிடும் உணவிலிருந்து அதிக கலோரி உறிஞ்சப்படும்.

எஸ்.அபிராமி,

நியூட்ரிஷனிஸ்ட, சென்னை.

contact@sanonutrition.in


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us