sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

வாராவாரம்

/

நலம்

/

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'ஏசி'யில் உலரும் கண்கள்!

/

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'ஏசி'யில் உலரும் கண்கள்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'ஏசி'யில் உலரும் கண்கள்!

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி!: 'ஏசி'யில் உலரும் கண்கள்!


PUBLISHED ON : மார் 11, 2018

Google News

PUBLISHED ON : மார் 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒரு நாளில், சராசரியாக, 16 மணி நேரம், 'ஏசி'யில் இருக்கிறோம். வெப்பம், மாசு இவற்றிலிருந்து தப்பிக்க உதவினாலும், தொடர்ந்து, 'ஏசி'யில் இருப்பது, கண்களுக்கு வறட்சியை ஏற்படுத்தும்.

இயல்பான கண்ணீர் சுரப்பு இருப்பவர்களுக்கு கூட, 'ஏசி' அறைகளில், கண்களில் வறட்சி ஏற்படும். 'ஏசி' கட்டடங்களின் சுகாதாரமற்ற சூழல், வைரஸ், பாக்டீரியா மற்றும் பூஞ்சை பரவ காரணங்கள் என, உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வுகள் கூறுகின்றன.

சென்னை உட்பட, காற்று மாசு அதிகம் உள்ள பெருநகரங்களில், மற்ற இடங்களை விட, 3 - 4 மடங்கு, உலர் கண் பிரச்னை அதிகம் உள்ளது. அலுவலகங்களில் முழு நேரமும், கம்ப்யூட்டரை பயன்படுத்தும் பெண்களில், 75 சதவீதத்திற்கும் மேல், உலர் கண் பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.

அறிகுறிகள்

கண்களில் எரிச்சல், அரிப்பு, வலி, பாரம், புண், உலர்வான உணர்வு மற்றும் மங்கலான பார்வை போன்றவை, உலர் கண் நோய்க்கு முக்கிய அறிகுறிகள். இதுதவிர, வயது முதிர்ச்சி, 'மெனோபாஸ்' காலத்திற்கு பின் ஏற்படும் ஹார்மோன் கோளாறுகள், நீரிழிவு, தைராய்டு கோளாறுகள் மற்றும் விட்டமின், 'ஏ' குறைபாடு போன்றவையும் காரணங்கள்.

லேசர் சிகிச்சையை தொடர்ந்து, உலர்கண் பாதிப்பு தற்காலிகமாக ஏற்படலாம். கண்களில் உள்ள மூன்று அடுக்குகளில், வெளிப்புற அடுக்கில் எண்ணெய் பசையுள்ள திரவமும், நடுவில் உள்ள அடுக்கில் நீரும், உட்புற அடுக்கில் புரதமும் சுரக்கும்.

அழற்சி அல்லது கதிர்வீச்சு காரணமாக, கண்ணீர் சுரப்பியில் சேதம் ஏற்படுவதும், கண்ணீர் சுரப்பிகளின் திறனை பாதிக்கலாம்.

உலர் கண் பாதிப்பை தடுக்க...

'ஏசி' மற்றும் காற்றோட்ட வசதியில்லாத அறைகள் பயன்படுத்துவதை தவிர்க்கலாம். 'ஏசி'யில் இருந்து வரும் காற்று, நம் மீது நேராகப் படக் கூடாது.

தினமும், எட்டு மணி நேரம் துாங்குவது, கண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியம். வெளியில் செல்லும் போது, 'சன் கிளாஸ்' அணியலாம்.

டாக்டரின் அறிவுரைப்படி, சொட்டு மருந்து பயன்படுத்தலாம். போதுமான அளவு கண்களில் நீர் சுரப்பு இல்லாவிட்டால், நோய்த் தொற்று ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது.

உலர் கண் பாதிப்புக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கண் அழற்சி, கருவிழிப்படல மேற்பரப்பில் சிராய்ப்பு, கருவிழிப்படலப் புண் மற்றும் பார்வைக் கோளாறுகள் ஏற்படலாம்.

டாக்டர் சவுந்தரி சிவஞானம்,

கண் சிறப்பு மருத்துவர், சென்னை

soundari404@gmail.com






      Dinamalar
      Follow us