குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கர்ப்பத்தின் இரண்டு எதிரிகள்!
குண்டு மல்லி, கொஞ்சம் கேளு!: கர்ப்பத்தின் இரண்டு எதிரிகள்!
PUBLISHED ON : மார் 11, 2018

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடல் பருமன் அதிகம் உள்ள பெண்கள், எடையைக் குறைக்க, கடுமையான உடற்பயிற்சி செய்கின்றனர். அவ்வாறு செய்வதால், 'ஈஸ்ட்ரோஜென்' ஹார்மோன் சுரப்பு அதிகமாகலாம். இது, மாதவிடாய் சுழற்சியையும், கருமுட்டை உற்பத்தியையும் பாதிக்கும்; இதனால், கரு தரிப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இளம் பெண்கள் செய்யும் சில வகை உடற்பயிற்சிகள், 'ஈஸ்ட்ரோஜென்' சுரப்பை குறைத்து, மாதவிடாய் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. இதனாலும், பின்னாளில் கரு தரிப்பதில் பிரச்னை வருகிறது.
தேவையற்ற கர்ப்பத்தை தடுக்க சாப்பிடும் பெரும்பாலான கருத்தடை மாத்திரைகளில், 'ஈஸ்ட்ரோஜென்' அதிகமாக இருக்கும் என்பதை, அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்; இதனால் கரு தரிப்பதில் சிக்கல் ஏற்படும்.
டாக்டர் சிவகுமார் சந்திரசேகரன்,
மகப்பேறு மருத்துவர், சென்னை.

