PUBLISHED ON : மார் 04, 2018

வயதுக்கு ஏற்ப, என், 'ஒர்க் - அவுட்' மற்றும், 'டெக்னிக்' மாறி வருகிறது. சிறுமியாக இருந்த போது, ரன்னிங் தான் எனக்கு பிடிக்கும். தற்போது, 35 வயதில், இன்னும் எவ்வளவு ஆண்டுகள் முடியுமோ, அத்தனை ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டிற்கு பங்களிக்க விரும்புகிறேன்.
எனவே, உடல் வலிமைக்கு தகுந்த, 'ஒர்க் - அவுட்' செய்கிறேன்; அதேநேரம், போதுமான அளவு ஓய்வும் எடுக்கிறேன்.
என் அம்மா தான் எனக்கு பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த, 65 வயதிலும் சைக்கிளிங், யோகா, நடைபயிற்சி என, தினமும் தவறாமல் செய்வார்.
தினசரி வாழ்க்கையில், குறிப்பிட்ட நேரத்தில் துாங்கி எழுந்து, தேவைக்கு ஏற்ப ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட்டு, மனதை, ரிலாக்சாக வைப்பது என, சில ஒழுங்குமுறைகளை தவறாமல் கடைபிடிப்பது தான், என், 'பிட்னெஸ்'சிற்கு காரணம்.
- மிதாலி ராஜ்
கேப்டன், இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி.

